சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு 124 ஆக உயர்வு : தாய்லாந்து குழுவால் எண்ணிக்கை அதிகரிப்பு

Added : மார் 31, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொரோனா பாதிப்பு 124 ஆக உயர்வு : தாய்லாந்து குழுவால் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை :தமிழகத்தில், மேலும், 57 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதுடன், பின், டில்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற தாய்லாந்து நாட்டினரால், பலருக்கு கொரோனா பரவி, தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சீனாவில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது முதல், தமிழக விமான நிலையங்களில், வெளிநாட்டினர் வருகையை கண்காணிக்கும் பணி துவங்கியது. அதன்படி, ஜனவரி முதல் மார்ச், 22 வரை, 2.9 லட்சம் பேர், வெளிநாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு வந்துள்ளனர்.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என, நேற்று முன்தினம் வரை, 67 பேர், இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

நேற்று ஒரே நாளில், 57 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னை, பொழிச்சலூரைச் சேர்ந்த, 43 வயது நபருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான இவரது தாயாருக்கு, கொரோனா வைரஸ் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு உள்ளது.அதேபோல, திருவண்ணாமலையைச் சேர்ந்த, 28 வயது நபருக்கு, கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர், ஏற்கனவே, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும், அரியலூரைச் சேர்ந்த, 25 வயது பெண்ணுடன் பணியாற்றும் நபர்.மீதமுள்ள, ௫௫ பேரும், தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து, பின் டில்லி சென்று, மத ரீதியான மாநாட்டில் பங்கேற்ற, தாய்லாந்து குழுவினருடன் தொடர்பில் இருந்தவர்கள். டில்லியில் நடந்த மாநாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த, ௧,௫௦௦ பேர் பங்கேற்றுள்ளனர்.

அவர்களில், ௫௧௫ பேரை மட்டுமே, தமிழக சுகாதாரத் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். மீதமுள்ளவர்களை, அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அடையாளம் காணப்பட்டவர்களில், 67 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை, 124 ஆக உயர்ந்துள்ளது.

3.96 லட்சம் பேரிடம் ஆய்வு!

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் வீடுகளை சுற்றி, 5 கி.மீ., தூரத்திற்கு, யாருக்காவது பாதிப்பு இருக்கிறதா என்ற, ஆய்வு பணி, 12 மாவட்டங்களில் நடந்து வருகிறது. அதன்படி, இதுவரை, 1.08 லட்சம் வீடுகளில் வசிக்கும், 3.96 லட்சம் நபர்களிடம், ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு, கொரோனா தடுப்பு குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X