இத்தாலியில் துக்க தினம் அனுசரிப்பு

Added : மார் 31, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

இத்தாலியில் கொடூர கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் நினைவாக அந்நாட்டின் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, ஒரு நிமிடம் மவுன அஞ்சலியுடன் துக்க தினம் அனுசரிக்கப்பட்டது.



latest tamil news



ஆறு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடி வருகிறது. கடந்த பிப்ரவரியில் வடக்கு இத்தாலியில் உள்ள மிலன் நகரில் முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை 11 ஆயிரத்து 591 பேரின் உயிரை கொரோனா குடித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பில் மூன்றில் ஒரு பங்கு இத்தாலியில் பதிவாகியுள்ளது.

இரண்டாம் உலக போருக்கு பின் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பேரழிவால் ஒரே மாதத்தில் இவ்வளவு உயிரிழப்புகளை இத்தாலி சந்தித்து இல்லை. எனவே இன்றைய தினத்தை துக்க தினமாக அனுசரித்துள்ளது.இத்தாலியின் துக்க தினத்தில் பங்கேற்கும் விதமாக வாட்டிகன் நகரத்தின் கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.


கட்டுப்பாடுகள் நீட்டிப்பு


இத்தாலியில் கொரோனா பரவலை தடுக்க மூன்று வாரங்களுக்கு முன் காலவரையற்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதுவரை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஐரோப்பிய யூனியனின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்த இத்தாலி, கொரோனாவால் அனைத்து தொழில்களும் முடங்கியிருப்பதால், பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான மந்தநிலையை எதிர்கொண்டு வருகிறது.

கொரோனாவை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏப்ரல் மத்தியில் வரை நீட்டிக்க இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து கடைகள் மற்றும் உணவகங்கள் மே மாதம் திறக்க வாய்ப்பில்லை. ஒரு மாதத்திற்கு முன் இருந்த வாழ்க்கை எப்போது திரும்புமென எந்தவொரு அதிகாரிகளாலும் கணிக்க இயலவில்லை.


latest tamil news





வீட்டில் இருப்பது அவசியம்:

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த நாட்டையும் காயப்படுத்தி இருப்பதாக சிட்டி ஹாலில் நடந்த மவுன அஞ்சலிக்கு பின் ரோம் நகர மேயரான வர்ஜீனியா ராகி தெரிவித்தார். மேலும் ஒன்றிணைந்து கொரோனா இல்லாத நிலையை அடைவோம் எனவும் , நம்முடைய தியாகம் என்பது அனைவரின் உயிரை காக்க வீட்டில் இருப்பது அவசியமான ஒன்றாகும். உயிரிழந்த அனைவருக்கும் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் பணிபுரியும் மக்கள் போன்ற ஆபத்தை பொருட்படுத்தாமல் நிலையில் பணிபுரிவோருக்காக நாம் இதை செய்ய வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
31-மார்-202022:45:00 IST Report Abuse
R. Vidya Sagar சாவு வீட்டில் எல்லாம் தவறாமல் ஆஜர் ஆகின்ற ஒரு மாபெரும் தலைவர் இன்னும் செல்ல வில்லையே?
Rate this:
Cancel
31-மார்-202021:57:08 IST Report Abuse
kulandhai Kannan போப்பாண்டவர் அனுஷ்டித்தாரா??
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
31-மார்-202021:44:28 IST Report Abuse
K.Sugavanam ஆழ்ந்த இரங்கல்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X