பொது செய்தி

இந்தியா

ஊரடங்கு காலத்தில் மது குடிப்பது,புகை பிடிப்பது ஆபத்து!நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என எச்சரிக்கை

Updated : ஏப் 02, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஊரடங்கு காலத்தில் மது குடிப்பது,புகை பிடிப்பது ஆபத்து!நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என எச்சரிக்கை

புதுடில்லி:'ஊரடங்கு காலத்தில் ஏற்படும் சலிப்பை போக்குவதற்கு மது குடிப்பது, புகையிலை பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இது போன்ற செய்கைகளால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். சமூக வலைதளங்களில் வரும் பொய் தகவல்களை, யாருக்கும் பகிர வேண்டாம்' என, மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுதும் பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக, 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருப்பதால், சிலருக்கு சலிப்பு ஏற்படுவதாகவும், அதை போக்குவதற்காக அதிக அளவில் மது குடிப்பது, புகையிலை பொருட்களை பயன்படுத்துவது போன்ற செய்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.


அறிவுறுத்த வேண்டும்தயவு செய்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். தற்போது வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மது குடிப்பது போன்ற செய்கைகளால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, எளிதில் வைரஸ் தொற்று ஏற்படும். யாருக்காவது வைரஸ் அறிகுறி தென்பட்டால், முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இதற்கான மருத்துவ உதவியை எப்படி நாடுவது என, அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வைரஸ் பரவாமல் இருப்பதற்காகவே, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும், வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டும். குடும்பத்தில், நல்ல உடல் நலத்துடன் இருக்கும் யாராவது ஒருவர் மட்டும், பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்லலாம். அடிக்கடி வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

யாருக்காவது அவசரமாக மருத்துவ உதவி தேவைப்பட்டால், அருகில் உள்ள மருத்துவ மையங்களை நாடலாம்.இது, நமக்கு மிகவும் நெருக்கடியான காலம். உலகம் முழுதும் இந்த வைரஸ், எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை நாளிதழ்கள், 'டிவி' சேனல்கள் மூலமாக நாம் பார்த்து வருகிறோம். எனவே, அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் ஏற்பட்டால், பதற்றம் அடைவதோ, பயப்படுவதோ கூடாது. முறையான மருத்துவ சிகிச்சை பெற்று, அதிகம் பேர் குணமடைந்துள்ளனர். எனவே, தாமதமின்றி மருத்துவ உதவியை நாட வேண்டும்.


மன அழுத்தம்வீட்டில் தனித்து இருப்பது அல்லது தனிமையாக இருப்பதால், சிலருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். எனவே, நல்ல பாடல்களை கேட்பது, புத்தகங்களை படிப்பது, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். வயதானவர்கள் உணவு வசதி இல்லாமல் அவதிப்படுவது தெரிய வந்தால், அருகில் உள்ளவர்கள், அவர்களுக்கு உதவ வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக ஊடகங்களில் வரும் நம்பகத் தன்மையற்ற, பொய் தகவல்களை, வேறு யாருக்கும் பகிர வேண்டாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஓய்வு தேதி நீட்டிக்கப்படாதுகடந்த மாதம், 31ம் தேதியுடன் பணிக் காலம் முடிந்த மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவலை, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.பணிக்காலம் முடிந்த ஊழியர்களின் ஓய்வு பெறும் தேதி நீட்டிக்க படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஊழியர்களின், 'சஸ்பெண்ட்' உத்தரவும் திரும்ப பெறப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆய்வகங்களுக்கான கருவிகள் சுகாதாரத்துறை நடவடிக்கை

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து, மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், ஆய்வகங்களுக்கான, பரிசோதனை கருவிகள் வாங்கும் நடவடிக்கைகளை, உடனடியாக மேற்கொள்ள, மத்திய சுகாதார அமைச்சர், ஹர்ஷ் வர்தன், நேற்று உத்தரவிட்டார். இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:'மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான, சோதனை கருவிகள், அவற்றுக்கான உபகரணங்கள் பெறுவதில் எவ்வித பிரச்னைகளையும் எதிர்கொள்ளக்கூடாது' என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆய்வகங்கள் மற்றும் பரிசோதனை வசதிகள் இல்லாத, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், கூடுதல் கண்காணிப்பில் வைக்கப்படும்.அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் உள்ள கருவிகளின் தரத்தை, இந்திய மருத்துவ கவுன்சில் கண்காணிக்க வேண்டும்.இது தொடர்பாக, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சி நிறுவன மூத்த அதிகாரிகளுடன், சுகாதார அமைச்சர் மறு ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார்.
அப்போது, '129 அரசு ஆய்வகங்கள் மற்றும், 49தனியார் ஆய்வகங்கள், நாள்தோறும், 13ஆயிரம் மாதிரிகளை சோதனை செய்வதற்கான தகுதி உள்ளவை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தனியார் பங்களிப்புடன், 16 ஆயிரம் மாதிரி சேகரிப்பு மையங்கள் செயல்பாட்டில் உள்ளன என்றும், மாநிலங்களுக்கு போதுமான பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டது.

இதுவரை, தனியார் ஆய்வகங்களில், 1,334 உள்ளிட்ட, 38 ஆயிரத்து, 442 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுஉள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலர், டாக்டர் அசுதோஷ் சர்மா கூறும்போது, ''கொரோனா தொடர்பான ஆராய்ச்சி, நோயறிதல், மருந்துகள், வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு பொருட்கள், கிருமி நாசினிகள் ஆகியவை வாங்குவது தொடர்பாக, 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ''வேகம், செயல்பாடு, செலவு ஆகியவற்றின் அடிப்படையில், நிறுவனங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X