வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்வதை தடுத்து நிறுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Updated : ஏப் 02, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்வதை தடுத்து நிறுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி:'வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்கு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து சரியான தகவல்கள் மக்களுக்கு கிடைக்கும் வகையில், தனி இணையதளத்தை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் வேலை பார்த்து வந்தவர்கள், தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப முயன்றனர்.

இவ்வாறு பல மாநிலங்களின் எல்லையில், ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். ஆனால், அவர்கள் வெளியேற மாநிலங்கள் அனுமதிக்கவில்லை.இதனால், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் வழியாக, பலர் நடந்தே, தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப முயன்றனர். வெளிமாநிலத் தொழிலாளர் நிலை குறித்து, உச்ச நீதிமன்றத்தில் இரண்டு, பொது நலன் வழக்குகள் தொடரப்பட்டன.அவற்றை விசாரித்த, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் அமர்வு பிறப்பித்த உத்தரவுகள்:

*ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெளியேற அனுமதிப்பதில்லை என்ற அரசின் முடிவை ஏற்கிறோம்

* கிராமங்களில், வைரஸ் பாதிப்பு இல்லை. அதே நேரத்தில், நகரங்களில் இருந்து, கிராமங்களுக்கு செல்லும், 10 பேரில், மூன்று பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்கிறோம்

* நாடு முழுதும், 6.63 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்குவதற்கு தேவையான இடம், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. சாலையோரம் வசிப்போர், ஆதரவற்றோர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் என, 22 லட்சம் பேருக்கு தேவையான வசதிகளை மத்திய - மாநில அரசுகள் செய்துள்ளன
* அதனால், வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதை தடுத்து நிறுத்தவும்

* வைரஸ் பாதிப்பை விட, அது தொடர்பான பயம், அச்சமே, பலருடைய உயிரை பறிக்கும் அபாயம் உள்ளது அதனால், பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு, தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களை, சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மூலமே நிர்வகிக்க வேண்டும். போலீசார் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது
* பல்வேறு மதத் தலைவர்கள் மூலம், தொழிலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்

* கொரோனா வைரஸ் குறித்து, பல்வேறு பொய் தகவல்கள் சமூக வலை தளங்கள் மூலம் பரப்பப்படுகின்றன. அதனால், உண்மையான நிலவரம் குறித்து தகவல் அளிக்க, தனி இணைய தளத்தை உருவாக்க வேண்டும்
* இந்தப் பிரச்னை தொடர்பாக, பல்வேறு உயர் நீதிமன்றங்கள் விசாரிப்பதற்கு தடை விதிக்க முடியாது. அவர்கள், சிறந்த முறையில் கண்காணிக்க முடியும். அதே நேரத்தில், இந்த உத்தரவு நகல்களை, உயர் நீதிமன்றங்களுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் கூறியுள்ளது.

வழக்கின் விசாரணை, ஏப்., 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசின் சார்பில், 39 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X