கொரோனாவால் திணறும் உலகம் பலி உயர்வால் ஊரடங்கு நீட்டிப்பு

Added : மார் 31, 2020
Share
Advertisement

பாரிஸ் :கொரோனா பாதிப்பும், பலியும் அதிகரித்து வருவதை அடுத்து, பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளன. உலகளவில், கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை, 7.50 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில், ஐரோப்பா, பாதிக்கப்பட்ட, 4.13 லட்சம் பேருடன், 25 ஆயிரத்திற்கும் அதிகமான மனித உயிர்களை இழந்து, முதலிடத்தில் உள்ளது.இத்தாலியில், கடந்த, 24 மணி நேரத்தில், 812 பேர் இறந்துள்ளனர்.

இந்நாடு, 11 ஆயிரத்து, 591 பேரை இழந்துள்ளது. கொரோனாவை அடியோடு ஒழிக்கும் நோக்கில், இத்தாலி, மூன்று வார ஊரடங்கு முடியும் நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்துள்ளது. ஐரோப்பாவைச் சேர்ந்த, ஸ்பெயின் நாட்டில், நேற்று ஒரே நாளில், 812 பேர் பலியாயினர். இங்கும், 12ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில், மார்ச், 16 முதல், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
அதுபோல, ஐரோப்பாவைச் சேர்ந்த, கிரீஸ், சைப்ரஸ் நாடுகளும், மக்கள் வெளியே வர புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கிரீஸ், ஊரடங்கு உத்தரவை, வரும், 11ம் தேதி வரை நீட்டித்து உள்ளது. சைப்ரஸ் அரசு, இரவு, 9:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில், ஊரடங்கு உத்தரவு, வரும், 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில், மக்கள் வெளியே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பிரான்ஸ் அரசு, ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்துள்ளது. இங்கு, நேரக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. ஒருவர், வெளியே வந்து, பொருட்கள் வாங்க, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
ரஷ்யாவில், கொரோனா பாதித்த, 1,836 பேரில், ஒருவர் மட்டுமே பலியாகியுள்ளார்.எனினும், அனைத்து எல்லைகளையும் மூடியுள்ள ரஷ்யா, தலைநகர் மாஸ்கோவில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வல்லரசு நாடான, அமெரிக்கா, கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி, மீள வழி தெரியாமல் தவிக்கிறது. உலகிலேயே, கொரோனா வைரஸ் பாதிப்பு இங்கு தான் அதிகம். 1.59 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இறப்பு எண்ணிக்கை, 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அமெரிக்க அரசு, ஏப்., 30 வரை மக்கள் தனித்திருக்க, 'சமூக விலக்கல்' உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X