பொது செய்தி

இந்தியா

'கொரோனா'நிவாரண நிதி: நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

Updated : ஏப் 02, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
கொரோனா, நிவாரணநிதி,  நிறுவனங்கள். மத்திய அரசு

புதுடில்லி: கொரோனா நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதி வழங்குமாறு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை செயலர், இன்ஜெட்டி ஸ்ரீநிவாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து, ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்களுக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தின் விபரம்:

கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவி வழங்க, மத்திய அரசு, PM-CARES Fund எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியத்தை துவக்கியுள்ளது. இதில் திரட்டப்படும் தொகை, கொரோனா தடுப்புநடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.


விலக்கு



நாடு எதிர்நோக்கியுள்ள இந்த இக்கட்டான தருணத்தில், மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், கார்ப்பரேட் நிறுவனங்களும், நிதியுதவி மூலம் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

இந்நிதியத்தில் திரட்டப் படும் நிதி, மருத்துவமனைகளில், தனிமைப்படுத்தும் இடங்களை அமைக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கவும், முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளப் படும். இந்நிதியத்திற்கு, நிறுவனங்கள் தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும். மார்ச், 31க்குள் வழங்கும் நிதியுதவி அனைத்துக்கும், வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

ஏப்.,1 முதல், பழைய வரி முறையை பின்பற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே, வரி விலக்கு சலுகை கிடைக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


ரூ.100 கோடி


இதையடுத்து, பொதுத் துறையைச் சேர்ந்த, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், பிரதமரின், அவசர கால நிவாரண நிதியத்திற்கு, 200 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளது. இத்துடன், இந்நிறுவன ஊழியர்களும், ஒரு நாள் ஊதியத்தை, கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

சுனில் மிட்டலின், பார்தி ஏர்டெல், பார்தி இன்ப்ராடெல் உள்ளிட்ட நிறுவனங்களை உள்ளடக்கிய, பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனமும், பிரதமரின் நிவாரண நிதியத்திற்கு, 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குகிறது.


'பாலிவுட்' நட்சத்திரங்கள் தாராளம்


பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள், பிரியங்கா சோப்ரா, அலியா பட், விக்கி கவுசல் உள்ளிட்டோரும், நிதியுதவி அறிவித்துள்ளனர். பிரியங்கா சோப்ரா, தன் கணவர், நிக் ஜோன்ஸ் உடன் இணைந்து, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியம் உள்ளிட்ட, 10 அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.அவர், அளித்த தொகையை குறிப்பிட விரும்பவில்லை என, தெரிவித்துள்ளார். விக்கி கவுசல், மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதியத்திற்கு, 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இதற்கிடையே, பின்னணி பாடகி, லதா மங்கேஷ்கர், மஹாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதியத்திற்கு, 25 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.


டி.வி.எஸ்., ரூ.5 கோடி நிதியுதவி

தொழிலதிபர், வேணு சீனிவாசன் தலைமையிலான, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு, 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஏற்கனவே, இந்நிறுவனம், இதர குழும நிறுவனங்களுடன் இணைந்து, பிரதமரின் நிவாரண நிதியத்திற்கு, 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.


விஜய் மல்லையா வேண்டுகோள்



வங்கியில், 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்து, லண்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர், விஜய் மல்லையா, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமனுக்கு, நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.'தற்போது கொரோனா பரவி வரும் இக்கட்டான சூழலில், நான் வாங்கிய கடன் தொகை முழுவதையும் திரும்பத் தர தயாராக இருக்கிறேன். என் சொத்து முடக்கத்தை அமலாக்கத் துறை நீக்கி, அத்தொகையை பெற்றுக் கொள்ள வழி செய்ய வேண்டும்' என, அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X