360 கோடி பேர் வீடுகளில் முடக்கம்: உணவுக்காக அலையும் அவலம்

Added : மார் 31, 2020
Share
Advertisement

மேட்ரிட் :'கொரோனா' வைரஸ், உலக நாடுகளை முடக்கி, பொருளாதாரத்தை சீர்குலைத்து, தன் கோர முகத்தை வெளிகாட்டி வருகிறது. இதனால், உலகெங்கும், 360 கோடி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உணவுக்காக மக்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்தாண்டு, டிச.,ல் நம் அண்டை நாடான சீனாவில், முதல் கொரோனா வைரஸ் தொற்று தென்பட்டது. இந்தாண்டு, ஜன., 10ல் முதல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. சீனாவில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ், உலகெங்கும் வேகமாக பரவி, மக்களையும், நாடுகளையும் தொடர்ந்து, மரண பீதியில் வைத்துள்ளது.

காவு

இதுவரை, எட்டு லட்சத்து, 3 ஆயிரத்து, 126 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், ஒரு லட்சத்து, 72 ஆயிரத்து, 396 பேர் சிகிச்சை பெற்று திரும்பிஉள்ளனர். அதே நேரத்தில், உலகெங்கும், 39 ஆயிரத்து, 32 உயிர்களை காவு வாங்கியுள்ளது.உலகெங்கும், மொத்த மக்கள் தொகையான, 753 கோடியில், 360 கோடி பேர் வீடுகளில் முடங்கிஉள்ளனர். பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து, வணிகம் என, அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கத்தால், பொருளாதார பாதிப்புகளை பல நாடுகள் சந்தித்து வருகின்றன.

பிரிட்டன் பிரதமர், போரிஸ் ஜான்சன் உட்பட பல நாட்டுத் தலைவர்களே, வைரஸ் பாதிப்பால், தனிமையில் இருந்து, நிர்வாகத்தை கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.உலகையே முடக்கிஉள்ள இந்த வைரசால், ஐரோப்பிய நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளில் மிகவும் அதிகபட்சமாக, 849 பேர் பலி என்ற மிகப் பெரிய சோகத்தை, ஸ்பெயின் சந்தித்துள்ளது.
மொத்த பலியில், கிட்டத்தட்ட, 30 சதவீதம் என, 11 ஆயிரத்து, 691 பேர், இத்தாலியில் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், மிக சிக்கலான நேரத்திலும் சிறப்பாக செயல்படும் மருத்துவ துறையினருக்கு நன்றி தெரிவித்தும், இத்தாலியில், தேசியக் கொடிகள், அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.தொற்றுஇந்தாண்டு, ஜன. 30ல் முதல் தொற்று தென்பட்ட, ஸ்பெயினில், வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது.

ஒரே நாளில், 6,461 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு, 94 ஆயிரத்து, 417 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்நிலையில், ஒரு நாளில், 849 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 8,189ஆக உயர்ந்துள்ளது.தற்போதுள்ள நிலையில், அதிக தொற்று, அதிக பலியில், மற்ற நாடுகளை, ஸ்பெயின் மிஞ்சிவிடும் அபாயம் உள்ளதால், நாட்டு மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.என்ன நடக்கிறது, என்ன நடக்கும் என்பது புரியாமல், அமெரிக்கா திண்டாடி வரும் நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை, 3 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம், 1.64 லட்சம் பேருக்கு தொற்று உள்ளது. இதுவரை, 3,175 பேர் உயிரிழந்துள்ளனர்.
நியூயார்க் நகரம் கிட்டத்தட்ட ஒரு மயான பூமிபோல் காட்சி அளிக்கிறது. அங்குள்ள சென்ட்ரல் பூங்காவுக்கு மகிழ்ச்சியாக சென்று வந்த நகரவாசிகள், அங்கு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு உள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதைத் தவிர, நகரில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க, 1,000 படுக்கை வசதி கொண்ட, கடற்படை கப்பல், மன்ஹாட்டன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.உணவு வசதி இல்லாதவர்களுக்காக, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில், மக்கள் குவிந்து வருகின்றனர்.

உலகின் நிதிச் சேவையின் தலைநகராக கருதப்படும் நியூயார்க்கில், முழு ஊரடங்கால், இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.மேரிலேண்ட் மாகாணத்தில், ஓய்வூதியதாரர்கள் தங்கும் குடியிருப்பு பகுதியில், 67 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 90 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.மேரிலேண்டைத் தொடர்ந்து, விர்ஜினியா, வாஷிங்டன் என, பல நகரங்களிலும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில், 75 சதவீதம் பேர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
பிரான்சை சேர்ந்த, எலிஸ் கார்டியர் என்ற நர்ஸ், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி, உலகெங்கும், இந்த வைரஸ் ஏற்படுத்திஉள்ள தாக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்து உள்ளது.வேதனை'காலையில் எழுந்தபோது, அழுதேன். காலை உணவை எடுக்கும்போதும் அழுதேன். பணிக்கு செல்வதற்கு தயாரான போதும் அழுதேன். 'மருத்துவமனைக்கு சென்றபோது, கண்ணீரை நிறுத்தினேன். அங்குள்ள மக்கள் கண்ணீரில் உள்ளனர்.

அவர்களுடைய கண்ணீரை வற்ற வைக்க வேண்டும் என்பதால், என்னுடைய கண்ணீரை நிறுத்தினேன்' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.பெரும்பாலான நாடுகளில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இரண்டு வாரங்களைத் தாண்டியுள்ளது.ஆனால், எப்போது வைரஸ் பாதிப்பில் இருந்து வெளியேறுவோம் என்பது தெரியாமல், பல நகர மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர்.
உலகெங்கும் உள்ள நிலைநாடு தொற்று உள்ளோர் புதிய பாதிப்பு பலி புதிய பலி குணம் அடைந்தோர்மொத்தம் 803,126 18,411 39,032 1,249 172,396
அமெரிக்கா 164,435 591 3,175 19 5,507இத்தாலி 101,739 - 11,591 - 14,620ஸ்பெயின் 94,417 6,461 8,189 473 19,259சீனா 81,518 79 3,305 5 76,052ஜெர்மனி 67,051 166 682 37 15,824ஈரான் 44,605 3,110 2,898 141 14,656பிரான்ஸ் 44,550 - 3,024 - 7,927பிரிட்டன் 22,141 - 1,408 - 135நெதர்லாந்து 12,595 845 1,039 175 250இந்தியா 1,251 - 32 - 102

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X