சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பக்க வாத்தியம்

Added : மார் 31, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பக்க வாத்தியம்

'நேரடியாக சொல்லுங்கள்!'

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், வேளாண்மை துறை அமைச்சர், துரைக்கண்ணு, சமீபத்தில் ஆய்வு நடத்தினார்.

அவரிடம், மருத்துவ அலுவலர், டாக்டர், பிரபாகரன், 'மருத்துவமனையில், 10 நாட்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் தான் உள்ளன. சில நாட்களில், 200 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், வார்டுகள் தயார் செய்யப்படும். அதனால், தேவையான அளவு மருந்து, உபகரணங்கள் வேண்டும் என, சுகாதாரம் மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்' என்றார்.

இது தொடர்பான மனுவை, பெற்றுக் கொண்ட அமைச்சர், 'இதை, சுகாதாரத் துறை அமைச்சரின் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன்' என்றார்.அங்கிருந்த பத்திரிகையாளர், 'மனுவை, டாக்டர்களே அனுப்பிருவாங்க... சுகாதாரத் துறை அமைச்சர்கிட்ட நேரடியா பேசி, உடனே நடவடிக்கை எடுக்கணும்முன்னு தானே, இவருகிட்ட மனு கொடுத்துருக்காங்க...' என்றார். அவர் பேசியது, அமைச்சரின் காதில் விழவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X