டாக்டர் பரிந்துரைத்தால் மது சப்ளை: கேரள குடிமகன்கள் கொண்டாட்டம்

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
kerela,கேரளா, டாக்டர் பரிந்துரை, மது சப்ளை,கொண்டாட்டம்

திருவனந்தபுரம் : கேரளாவில், ஊரடங்கின் காரணமாக மதுக் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மது அருந்தாமல், உடல் மற்றும் மனரீதியாக ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக, டாக்டர் பரிந்துரைத்தால் மது, 'சப்ளை' செய்யப்படும் என, அரசு அறிவித்துள்ளது.


latest tamil news





முடிவு



கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு, கொரோனா வைரஸ் பரவலால் மது கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

மது அருந்தாமல், உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டோருக்கு மட்டும், டாக்டர்கள் பரிந்துரையின்படி, மது வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, நேற்று முன்தினம் இரவில் அரசு வெளியிட்ட உத்தரவு:ஊரடங்கின் காரணமாக, மது கிடைக்காமல் விரக்தி அடைந்த பலரும், தற்கொலை முயற்சியில் இறங்குகின்றனர். அவர்களுக்கு மட்டும், பரிந்துரைக்கப்பட்ட அளவில் மது கிடைக்க, வழிவகை செய்யப்படுகிறது.

மது கிடைக்காமல் பாதிக்கப்பட்டோர், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.நடவடிக்கை'குறிப்பிட்ட அளவில் மது வழங்கலாம்' என, டாக்டர் அளிக்கும் சான்றிதழ் மற்றும் அரசு அடையாள அட்டையை, கலால்துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும்.கலால் அதிகாரிகள் கொடுக்கும் மதுவுக்கான அனுமதி சீட்டை, குடிபொருள் கூட்டுறவு அலுவலக நிர்வாக இயக்குனரிடம் வழங்கினால், அவர்களுக்கு மது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X