டில்லி மாநாட்டில் பங்கேற்றோருக்கு கொரோனா: ஆயிரக்கணக்கானோரை தேடி நாடு முழுதும் வேட்டை

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (174+ 37)
Share
Advertisement
corona update, covid 19 India, India fights corona, coronavirus crisis, coronavirus update, tablighi jamaat corona, delhi coronavirus

தடை உத்தரவு அமலில் இருக்கும்போதே, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மத பிரசங்க கூட்டத்தை நடத்தி, கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக, டில்லி நிஜாமுதீன் பகுதி ஜமாத் நிர்வாகம் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஏழு பேர், கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பங்கேற்ற பலர், விமானம், ரயில், பஸ் போக்குவரத்தின் மூலம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ஏற்கனவே திரும்பியுள்ளதை அடுத்து, அவர்களை கண்டறியும் முயற்சியை தீவிரப் படுத்தும்படி, மாநில அரசுகளை, மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது.


பிரசங்க கூட்டம்


டில்லியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும், நிஜாமுதீன் என்ற இடத்தில், கடந்த, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், பிரசங்க கூட்டம் நடந்தது. இதில், 280 வெளிநாட்டவர் உட்பட, 8,000 பேர், வெவ்வேறு நாட்களில் பங்கேற்றுள்ளனர். தப்லிக் ஜமாத் என்ற அமைப்பின் சார்பில் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. 'கொரானா அபாயம் இருப்பதால், அதிக எண்ணிக்கையில் கூடும் அளவுக்கு, யாரும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது' என, டில்லி போலீசார், ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர்.
அதை பொருட்படுத்தாமல் இந்த கூட்டம் நடந்துள்ளது. தப்லிக் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகம், டில்லி, நிஜாமுதீன் போலீஸ் ஸ்டேஷன் அருகேயுள்ள, 'மார்கஸ் நிஜாமுதீன்' என்ற, ஆறு மாடி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தான், இந்த பிரசங்க கூட்டம் நடந்துள்ளது.latest tamil news
கூட்டத்தில் பங்கேற்ற பலர், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு விமானம், ரயில் மூலம் திரும்பி விட்டனர். அந்தமானுக்கும் சிலர் சென்றுள்ளனர். மீதமுள்ள, 1,000க்கும் அதிகமானோர் அந்த கட்டடத்தில் தங்கியிருந்தனர்.அப்போது தான், கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, திடீரென, நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதிர்ச்சி


இதனால், இந்த கட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முயற்சித்துள்ளனர். விமானம், ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டதால், அவர்கள் அனைவரும், மீண்டும் மார்கஸ் நிஜாமுதீன் கட்டடத்திற்கே திரும்ப வந்து தங்கினர். வெளியுலகத்திற்கு இந்த விஷயம் பெரிதாக தெரியாமல் இருந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்று தெலுங்கானா மாநிலத்துக்கு திரும்பியவர்களில் ஆறு பேரும், ஸ்ரீநகர் திரும்பிய ஒருவரும், கொரோனா வைரஸ் தாக்கி இறந்துள்ளது, அந்த மாநில மற்றும் நிர்வாக அரசுகளுக்கு தெரியவந்தது.
உடனடியாக இது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின் தான், கூட்டம் நடந்த இடத்தில், டில்லி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமானோர் அந்த கட்டடத்தில் தங்கியிருந்தது தெரிய வந்தது. உடனடியாக, டில்லியின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு, அவர்கள் பல குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டனர்.இந்த விவகாரம் குறித்து, தப்லிக் ஜமாத் குழு செய்தி தொடர்பாளர் முகமது சோயப் அலி கூறியதாவது:திட்டமிட்டபடி, நாட்டின் பல பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் ஏற்கனவே வந்து கூடிவிட்டனர். அதன்பின் தான், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால், அனைவரும் இங்கு தங்கி விட்டனர். 'வெளியில் நடமாடக்கூடாது; அவரவர் இடங்களில் இருக்க வேண்டும்' என்ற உத்தரவை எல்லாரும் பின்பற்ற வேண்டிய தாகிவிட்டது. அதனால்தான், அலுவலகத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்நிலையில், இங்கு கூடியிருந்தவர்களில், 300க்கும் அதிகமானோரிடம் நேற்று முன்தினம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் அனைத்தும் வெளிவந்த பின், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இந்நிலையில்தான், நேற்று அந்த கட்டத்தில் தங்கியிருந்த அனைவரையும் வெளியேற்றிய போலீசார், அந்த கட்டடத்துக்கு, 'சீல்' வைத்தனர். கட்டடத்தில் இருந்தவர்கள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் என, 800 பேர் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 334 பேர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, டில்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியதாவது:மசூதி நிர்வாகம், மிகப்பெரிய தவறை செய்துஉள்ளது; இது, மன்னிக்க முடியாத குற்றம். மசூதி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து, டில்லி துணைநிலை கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளோம். நிஜாமுதீன் உட்பட அந்த பகுதி முழுதும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சுகாதாரப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், இங்கு வராமல் இருப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுஉள்ளது.
இதற்கிடையே, இந்த கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் அனைவரது முகவரிகளும் பெறப்பட்டு, அந்தந்த மாநில அரசுகளை தொடர்பு கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் உஷார் படுத்தியுள்ளது. கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள், விமானம், பஸ், ரயில் உள்ளிட்டவற்றில், தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்திருக்கலாம் என்பதால், அவர்களுடன் யார் யார் பயணம் செய்தனர், அவர்கள் யார் யாரை சந்தித்தனர் என்ற விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்படலாம் என்பதால், டில்லி மத கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்களை, உள்ளாட்சி மற்றும் வருவாய் நிர்வாகத்தினருடன் சேர்ந்து, நாடு முழுதும், அந்தந்த மாநில போலீசார், சல்லடை போட்டு தேடிக் கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.- நமது டில்லி நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (174+ 37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமதாசன் - chennai,இந்தியா
01-ஏப்-202019:39:38 IST Report Abuse
ராமதாசன் இதனால் மகிழிச்சிஅடைபவர்கள் யார் என்று உலகத்துக்கே தெரியும் - பிணத்தை வைத்து அரசியல் நடத்துபவர்களுக்கு இப்போ அல்வா கிடைச்ச மாதிரி இந்த நியூஸ்.. இப்போ மோடியையும் EPSiyum குற்றம் சொல்லலாமே - அவர்களுக்கு நல்ல பெயர் வந்திடாதே
Rate this:
Cancel
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
01-ஏப்-202018:46:18 IST Report Abuse
Sheri மாநாடு நடத்தியது முற்றிலும் சரியான செயல். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஜமாஅத் கூடுகிறது. டெல்லி அரசாங்கத்திடம் சரியான அனுமதி பெற்று கொண்டு நடத்தி இருக்கிறார்கள். அவர்களை குற்றம் சொல்ல முடியாது.
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
01-ஏப்-202019:37:18 IST Report Abuse
வாய்மையே வெல்லும்ஏன் உங்க மாநாடு ஒரு மாசம் கழிச்சு வெச்சா என்னவாம்.. அசிங்கம் பிடிச்சவனே ஊரே அடங்கு என நாடு மக்கள் வீட்டில் இருக்கும்போது எதுக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் கிருமி நோய் பரவும் சமயத்தில் வைத்தீர்கள்.. இது விதண்டாவாத பேச்சு .. அவமான சின்னமாக இன்று நீங்கள் உள்ளேர்கள் .....
Rate this:
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
01-ஏப்-202023:17:33 IST Report Abuse
M Selvaraaj Prabu//மாநாடு நடத்தியது முற்றிலும் சரியான செயல்.// போடா...
Rate this:
Cancel
Vijay - Bangalore,இந்தியா
01-ஏப்-202017:37:54 IST Report Abuse
Vijay ஒழுங்கா அவங்களே முன் வந்து பரிசோதனை செய்து கொள்ளவில்லை என்றால் , இன்னும் சிறுபான்மை ஆகிருவீங்க அப்புறம் சுடலை ராவுல் பொலப்புல மண் அல்லி போட்டுறாதீங்க ?? ஒழுங்கா ஆஸ்பத்திரில போய் செக் பண்ணிக்கோங்க ..
Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
01-ஏப்-202019:52:16 IST Report Abuse
அம்பி ஐயர்சிறுபான்மையினர் மேலும் சிறுபான்மையினர் ஆனா ஏன் ராவுல் சொடலை பொழப்புல மண் விழுது....??? அவங்களுக்கு அல்வா கிடைச்ச மாதிரி.... வேண்டும் என்றே மோடியும் இந்துத்வாவும் சேர்ந்து தான் கொரோனா விஷக்கிருமிகளை முஸ்லிம்கள் மீது பரப்பியதாகக் கூட பொய் கூறுவர்.... ஆக, மோடி பதவி விலக வேண்டும் நு அறிக்கை விடுவார்.... அதோடு பாதிக்கப்பட்ட / மரணமடைந்த சிறுபான்மையிரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும்.... ரூபாய் ஒரு கோடியும் கொடுன்னு போராட்டம் நடத்துவாங்க.... இவனுங்க நடத்துற கார்ப்பரேட் கம்பெனிகள்ல நல்ல வேலை கொடுக்க வேண்இயது தான.... பிணம் தின்னிக் கழுகுகள்.... கழுகு கூட அதன் பசிக்காத் தான் செய்கிறது... இவர்களோ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X