அடுத்த 30 நாட்கள் முக்கியமானவை: டிரம்ப் எச்சரிக்கை

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
coronavirus, covid 19, coronavirus in US, health, disease, social distancing in us, corona update, Trump, Donald Trump


வாஷிங்டன் ''கொரோனா வைரசை கட்டுப்படுத்த, அடுத்த, 30 நாட்கள் மிக முக்கியமானவை. இந்த நாட்களில், நமக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது,'' என, அமெரிக்க மக்களுக்கு, அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவிலும் கடும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.


latest tamil news



அமெரிக்காவில் இதுவரை, 1.64 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 3,100 பேர் பலியாகியுள்ளனர். வைரசை கட்டுப்படுத்த, ஏப்., 30 வரை நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் சமூக விலகலும், ஊரடங்கு நடவடிக்கையும் நீட்டிக்கப்பட்டுள்ளன. நெருக்கடி இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று கூறியதாவது: அமெரிக்கா முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இதை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த, 30 நாட்கள், நமக்கு மிகப் பெரிய சவாலும், நெருக்கடியும் காத்திருக்கிறது.இந்த, 30 நாட்களும், நமக்கு மிக முக்கியமானவை. ஏனென்றால், கொரோனா பாதிப்பிலிருந்து நாம் மீண்டுவர வேண்டியுள்ளது. ஆனால், அதற்காக நாம் பல தியாகங்களை செய்ய வேண்டியுள்ளது.

எவ்வளவுக்கு எவ்வளவு விட்டுக் கொடுக்கிறோமோ, தியாகம் செய்கிறோமோ, அவ்வளவு விரைவில், இந்த பாதிப்பிலிருந்து நம்மால் மீள முடியும். அந்த நாளுக்குக்காக தான் நாம் காத்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும், புதிதாக, 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டிய சவாலான பணி, நம் முன் உள்ளது. தற்காலிக மருத்துவமனைகளை அமைக்கும் பணியில், ராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்கள், தங்கள் வழக்கமான கார் தயாரிப்பு பணியை நிறுத்தி விட்டு, வென்டிலேட்டர்களை தயாரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். விரைவில் அறிவிப்புஅதற்கு பின் தான், பொருளாதாரத்தை சரி செய்யும் பணி துவங்கும். வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டால், பொருளாதார பாதிப்பை விரைவில் சரி செய்ய முடியும். மக்கள், இன்னும் சில கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து, விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


காலத்தின் கோலம் கவர்னர் கண்ணீர்



அமெரிக்காவின் நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ க்வோமோ கூறியதாவது:நியூயார்க்கில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது, மிகப் பெரிய இழப்பு. கண்ணீர் வடிப்பதை தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்க, வென்டிலேட்டர் கருவி, பரிசோதனை கருவிகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. முக கவசம், கை துடைக்கும் காகிதங்கள் ஆகியவையும் தேவைப்படுகின்றன. ஆனால், கொரோனா வைரசை, உலகம் முழுதும் பரப்பிய சீனாவிடமே, இந்த கருவிகளையும், பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது; இது, காலத்தின் கோலம். இவ்வாறு, அவர் கூறினார்.


பரிசோதனையில் புதிய மருந்து



'மலேரியா காய்ச்சலை குணமாக்கும், 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' மருந்தை, கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமீபத்தில் கூறியிருந்தார். இதையடுத்து, ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்தை, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு பயன்படுத்தும் நடவடிக்கை, அமெரிக்காவில், நேற்று முதல் துவங்கியுள்ளது.

l கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவைப்படும், தானாக இயங்கக் கூடிய, கையடக்க வென்டிலேட்டர் கருவியை, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பல்கலை பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். l கொரோனாவை குணப்படுத்தக் கூடிய புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளதாக, 'ஜான்சன் அண்டு ஜான்சன்' நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது அந்த மருந்து, பரிசோதனை முயற்சியில் இருப்பதாகவும், அதன் முடிவுகள் சாதகமாக இருந்தால், அடுத்தாண்டு முதல், இந்த மருந்து விற்பனைக்கு வரும் என்றும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
01-ஏப்-202010:54:37 IST Report Abuse
mindum vasantham ஐரோப்பிய பாதிரியர்களை china போட்டு தள்ளிவிட்டது
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
01-ஏப்-202004:46:11 IST Report Abuse
ocean kadappa india சைனாவில் உணவு தானியங்களை பயிரிட்டு தின்பதற்கு வக்கற்ற சீனர்கள் வன விலங்குகளையும் நாய் பூன் வவ்வால் பாம்பு எலி பன்றி கழுதை நண்டு மீன்கள் என அனைத்தையும் பிடித்து தின்கிறார்கள். ஆனால் இன்றைய உலக எல்கட்ரானிக் தகவல் தொடர்பு பொருட்கள் உற்பத்தியும் பயன்பாடுகளும் அவர்கள் கைகளில் அடங்கியுள்ளது. அந்தந்த மனித உள் உறுப்புகளை நாசம் செய்வதற்கு ஏற்ற பிராணிகளை கண்டறிந்து உயிரி ஆய்வு கூடங்களில் அவைகளை அழித்து அவைகளில் இருந்து வெளியேறும் வைரஸ்களை மனிதர்களின் எந்த உள் உறுப்புகளை தாக்கும் என்பதை ஆய்ந்து அவைகளின் வைரஸ்களை பெரிய பெரிய ஆய்வுக்கூட கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைத்து குளிர் காலங்களில் மூடி வைத்துள்ள கண்ணாடி வைரஸ் பாட்டில்களை திறந்து விடுகிறான். செல் போன் ஒலி ஒளி அலைகளை உலகெங்கும் செலுத்தும் திறன் அவனிடம் உள்ளன. அது போல் வைரஸ்களையும் உலகெங்கும் ஏவும் தொழில் நுட்பங்களை கண்டு பிடித்து உலகை அழிக்க பயன்படுத்துகிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X