பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை ஒழிக்குமா கோடை வெயில் ; இன்று துவக்கம்

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

சென்னை : 'இந்த ஆண்டுக்கான கோடை காலம், இன்று துவங்குகிறது. இயல்பான நிலையை விட, ஒரு டிகிரி செல்ஷியஸ் வெயில் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்கள், பெரும்பாலான மாநிலங்களில், கோடை காலமாக கருதப்படுகிறது. தமிழகத்தில், மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாகவும், ஜூன் முதல், தென்மேற்கு பருவமழை காலமாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கோடை காலம், இன்று துவங்கி, மூன்று மாதம் நீடிக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் கூறியுள்ளதாவது: பெரும்பாலான மாநிலங்களில், தற்போதைய வெப்ப நிலையை விட, ஒரு டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகும். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில், மற்ற மாநிலங்களை விட, வெயில் அதிகமாக இருக்கும். தமிழகத்தில், வழக்கமான கோடை வெயில் நிலவும். சில நேரங்களில், அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



கொரோனா வைரஸ், தற்போது, மனிதர்களின் உடல் வெப்ப நிலை, 90 டிகிரி பாரன்ஹீட் அளவில் பரவுகிறது. கோடை வெயில் அதிகரித்தால், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகும்; தற்போது வெப்பம் அதிகரிக்கும் இடங்களில் கொரோனா பரவாது என கூறப்படுகிறது. அப்போது, கொரோனா வைரஸ் பரவலின் வீரியம் குறையலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
01-ஏப்-202020:17:59 IST Report Abuse
Loganathan Kuttuva ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட பொது இடங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
Rate this:
Cancel
M.P.Madasamy - Trivandrum,இந்தியா
01-ஏப்-202014:00:24 IST Report Abuse
M.P.Madasamy வெயில்ல அலைஞ்சு உடம்ப கெடுத்துக்கிடாதே என்று சொல்வதற்கு பதிலாக இம்முறை வெயில்ல திரிஞ்சி உயிரை காப்பாத்திக்கோன்னு சொல்ல வேண்டி வருமோ?
Rate this:
Cancel
01-ஏப்-202011:00:17 IST Report Abuse
தமிழ் வழக்கமாக சுட்டெரிக்கும் வெயில் இந்த வருடம் நம்மை காப்பாற்றப்போகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X