பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கொரோனாவிற்கு சிறப்பு மருத்துவமனை

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை : மதுரை அரசு பல்நோக்கு மருத்துவமனை, 650 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.



latest tamil news



அரசு மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு துவங்கப்பட்டது. அறிகுறிகளுடன் வருவோரை அனுமதித்து பரிசோதிக்க சளி, இருமல், காய்ச்சல் வார்டு தனியாக ஏற்படுத்தப்பட்டது. மருத்துவமனையின் பழைய கட்டடங்கள் உள்ள பகுதியில் வெவ்வேறு இடங்களில் இந்த வார்டுகள் இருந்தன.


latest tamil news



நோயாளிகளை கொண்டுவருவது, வார்டுகளுக்கு மாற்றம் செய்வதில் சிக்கல் நிலவியது. படுக்கை வசதிக்கும் பற்றாக்குறை இருந்தது. இக்குறைபாடுகளை களைய அண்மையில் திறக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.


latest tamil news



புதிய கட்டடம் என்பதால் இங்கு வசதிகள் அதிகம். அறிகுறிகளுடன் வருவோரை தனிமைப்படுத்தி பரிசோதிக்க, சிகிச்சை அளிக்க ஏதுவாக 650 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 150 படுக்கை வசதி கொண்ட ஐ.சி.யூ., பிரிவும் இதில் அடங்கும். கொரோனா வார்டில் சிகிச்சை பெறும் 5 பேரும், இங்கு மாற்றப்படவுள்ளனர்.மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், 'உயர் சிகிச்சை அளிக்க வென்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கருவிகளும் இங்குள்ளன,' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karuppaiya -  ( Posted via: Dinamalar Android App )
01-ஏப்-202011:30:50 IST Report Abuse
Karuppaiya Very good decision.. Thanks for TN government and Dr Vijaya Baskar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X