ஊரடங்கு உத்தரவால் பெருகும் குடும்ப வன்முறை

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement

புதுடில்லி : நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் குடும்ப வன்முறை புகார்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து உள்ளது.latest tamil newsகொரோனா பரவலை தடுக்க மார்ச் 24 நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதுமுதல் அனைத்து நிறுவனங்கள் வணிக வளாகங்கள் தொழிற்சாலைகள் திரையரங்குகள் உள்ளிட்டஅனைத்தும் மூடிக்கிடக்கின்றன. இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஏராளமானோர் வேலையிழப்பு ஊதியக் குறைவு போன்ற அச்சம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இத்துடன் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கணவன் மனைவி மற்றும் குடும்பத்தினருடனான மோதல் அதிகரித்து வன்முறையில் முடிகிறது.


latest tamil newsஇது குறித்து தேசியமகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறியதாவது: மார்ச் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேசிய மகளிர் ஆணையத்திற்கு 58 புகார்கள் வந்துள்ளன. அனைத்தும் மின்னஞ்சல் புகார்கள். பெரும்பாலும் வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் இருந்து அதிக புகார்கள் பதிவாகி உள்ளன.வீட்டில் மன உளைச்சலுடன் உள்ள ஆண்கள் அதை பெண்கள் மீது வெளிப்படுத்தும் போது மோதல் ஏற்படுகிறது. இது தவிர குறைந்த வருவாய் பிரிவு பெண்கள் அஞ்சல் கடிதம் மூலம் அனுப்பிய புகார்களையும் சேர்த்தால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

ஊரடங்கால் அஞ்சல் புகார்கள் குறைவாக உள்ளன. நாடு தற்போதுள்ள சூழலில் எங்களை அணுக முடியாது என பல பெண்கள் நினைக்கின்றனர். அது தவறு. அவர்கள் போலீசிடம் புகார் தெரிவிக்கலாம். அல்லது மாநில மகளிர் ஆணையத்தில் புகார் கூறலாம்.இவ்வாறு அவர் கூறினார். இந்தாண்டு ஜனவரியில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு 270 புகார்கள் வந்தன. இது பிப்ரவரியில் 302 ஆக உயர்ந்தது. மார்ச்சில் 30ம் தேதி வரை 291 புகார்கள் வந்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03-ஏப்-202007:26:21 IST Report Abuse
skv srinivasankrishnaveni எல்லோருக்கும் ஒரு சிறுவிண்ணப்பம் ப்ளீஸ் ஆண்களே எப்போது நோய்நொடி இருக்கச்சேரிலே ஒலிக்கும் மோர்சிங்போல பிடுங்கி எடுக்குறது எதனால் ஹெல்ப் செய்யவேண்டாம் பிடுங்கியெடுத்து நிக்கவிடாமல் துரத்தும் ஆணைகளும் அவன் அம்மாவும் உடன்பிறந்தவாஎல்லோரும் தான்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
02-ஏப்-202016:37:47 IST Report Abuse
Endrum Indian அறிவின் விளிம்பில் இருப்பவர்களே இவர்கள்? எப்போ பார்த்தாலும் ஏதாவது ஒண்ணு சொல்லி பெண்கள் பாலியல் தொல்லை வன்முறை ஏதோ ஒண்ணு சொல்ல வேண்டியது அதற்கு தீர்ப்பு கடைசி வரை தேடுவது இல்லை?யாரையாவது எதற்காவது குறை சொல்லிக்கொண்டே இருப்பது?ஒரு நல்லது செய்றதுக்கு துப்பு இல்லே? எப்படியாவது தன் பெயர் மீடியாவில் வரவேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோள், மற்றபடி ஒரு பைசாவிற்கு இவர்கள் பிரயோஜனம் இல்லே. இப்போ நடப்பது கரோனா தாண்டவம் அதற்கு என்ன உதவி செய்தாய் நீ சொல்?பிரதமருக்கு பணம் அனுப்பினாயா? இல்லை 4 பேருக்கு அன்னதானம் செய்தாயா? அப்போ ஆண்களுக்கு இருக்கும் மன உளைச்சலுக்கு ஏதாவது தீர்ப்பு தான் சொல்லேன்?குடும்பம் என்றால் வெறும் பெண் மட்டுமே அல்ல ஆணும் இருக்கின்றான் ஆகவே இனிமேல் தேசிய ஆண் பெண் ஆணையம் என்று பெயர் மாற்றப்படவேண்டும் முதலில்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-ஏப்-202016:08:22 IST Report Abuse
skv srinivasankrishnaveni இதென்ன புதுசா பல ஆண்களின் கோபங்களுக்கே வடிகால்கள் கட்டிய மனைவிகளேதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X