பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் எம்.எல்.ஏ.,க்கள் சம்பளம் 60% குறைப்பு

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
maharashtra coronavirus, maharashtra coronavirus update, india coronavirus, india coronavirus news, salary cut

மும்பை: மஹாராஷ்டிராவில், மாநில முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநில துணை முதல்வரும், நிதி அமைச்சருமான, அஜித் பவார் கூறியுள்ளதாவது: கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவால், பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதை சமாளிக்கும் வகையில், மாநில முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி., எனப்படும் மேலவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மார்ச் மாத சம்பளத்தில், 60 சதவீதம் குறைக்கப்படுகிறது.


latest tamil news




அரசு அதிகாரிகளில், குரூப் 1 மற்றும் 2 பிரிவு அதிகாரிகளுக்கு, 50 சதவீதம், குரூப் 3 பிரிவு அதிகாரிகளுக்கு, 25 சதவீதம் குறைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


முட்டாள் தினம் வேண்டாம்:

மஹாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர், அனில் தேஷ்முக் கூறியுள்ளதாவது: ஏப்., 1ஐ முன்னிட்டு, மக்களை முட்டாளாக்குவதாக நினைத்து, கொரோனா குறித்து, தவறான செய்திகளை பதிவிட வேண்டாம். மக்களை பீதியில் ஆழ்த்த வேண்டாம். அவ்வாறு பொய் செய்தி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
01-ஏப்-202015:17:40 IST Report Abuse
s.rajagopalan இவரின் அமைச்சர் பவரின் மச்சான் படேல் அடித்த கொள்ளையில் கொஞ்சம் கிள்ளி கொடுக்கலாமே ? அதுவே பெரிய தொகையாக இருக்கும் . மேலும் ஊழலில் மன்னாதி மன்னனான பவார் கம் னு கிறாறே ? நெடுநாள் ஆசையை உதத்வ அடைந்து பதவியில் அமர்ந்த நேரம் .....பாவம்
Rate this:
Cancel
M.P.Madasamy - Trivandrum,இந்தியா
01-ஏப்-202013:09:35 IST Report Abuse
M.P.Madasamy கொரோனா ஓயுறவரைக்கும் எல்லா எம்.எல்.ஏ க்களுக்கும் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதாதா?அப்படியே செய்தாலும் சில வருடங்கள் கழித்து சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்துவானுங்க அது வேற கதை.
Rate this:
Cancel
பாலசுப்பிரமணியன் அ இன்றய சூழ்நிலையில் பணம் இல்லாமல் ஒருவரும் அரசியலில் இறங்கமுடியாது என்பது உண்மை. எம் எல் ஏக்கள் இதில் விதி விலக்கல்ல. இப்போது அவர்கள் பதவி பரம்பரையாகி விட்டது. மேலும் அவர்களுக்கு எல்லாம் இலவசமாக கிடைக்கிறது. மஹாராஷ்டிரா முதல்வர் இதை அறிந்துதான் இந்த சிக்கன நடவடிக்கையை செயல் படுத்தியுள்ளார் . இதை மற்ற முதல்வர்களும் செய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X