பொது செய்தி

இந்தியா

கொரோனா வார்டுக்காக தயாராகி வரும் ரயில்கள்

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
railways, Indian Railways, coronavirus wards, corona update, covid19 India,  coronavirus crisis, railway coronavirus india

புதுடில்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகம் உள்ளோர், தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தனிமைப்படுத்துவதற்காக, ரயில்களை தனிமை வார்டுகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு, கடந்த 14ம் தேதி முதல் அமலில் உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, இதனை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகளை மத்திய அரசு செய்துவருகிறது. இதன் ஒருபகுதியாக ரயில்களை தனிமை வார்டுகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது.


latest tamil news
ரயில் பெட்டியில் உள்ள ஒவ்வொரு கேபினும், ஒருவரை உள்ளடக்கும் வகையில் தனி வார்டுகளாக மாற்றப்படுகிறது. ஒரு பெட்டியில் 9 கேபின்கள் உள்ளன. ஒரு பெட்டியில் இருக்கும் 4 கழிவறைகளில் ஒன்றை குளியலறையாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறது.


latest tamil news'நாடு முழுவதும், 20 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாராகி வருகின்றன. இவற்றின் மூலம், 3.2 லட்சம் படுக்கை வசதி ஏற்படுத்த முடியும்' என, ரயில்வே கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
01-ஏப்-202010:10:33 IST Report Abuse
Appan வட மாநிலத்தில் இருந்து வந்த கடைநிலை வேலைசெய்யும் மக்கள் இந்த தடை உத்தரவால் சொல்லவென்ன துன்பங்களை அனுபவிக்கிறார்கள்..சோறு இல்லை, ஊருக்கு போக முடியாது ,வேலையும் இல்லை..பின் எப்படி அவர்கள் வாழ முடியும்..?.மோடியின் அரசு தடை உத்தரவு வந்த ஓரிரு நாட்கள் இலவச ரயில்களை உ.பி . பிகர், மேற்கு வங்கத்திற்கு விட்டிருக்க வேணும்..IRTC தினம் கோடி மக்களுக்கு உணவு தயாரிக்கிறது..அவர்களை வைத்து இந்த ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்திருக்க வேண்டும்..இந்தியாவில் என்ன வேறு நாட்டவரா ஆட்சி செய்கிறார்கள்.. நம் ரத்தத்தின் ரத்தங்கள் தான் ஆட்சி செய்கிறார்கள்.. கொரோனாவிற்கு இந்த அடக்கு முறை தேவைதான்.. அதை இப்படியா செய்வது.. இதனால் மக்கள் கொரோனவால் சாகாமல் பட்டியினால் சாவார்கள்.. ரயில்வேயில் 14 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள்..அவர்களுக்கு சும்மா சம்பளம் கொடுக்காமல் இப்படி அனாதைகளுக்கு உதவி இருக்கலாமே...
Rate this:
Subramaniyan Narayanamoorthy - Chennai,இந்தியா
01-ஏப்-202012:10:51 IST Report Abuse
Subramaniyan Narayanamoorthyஇவர் சிதம்பரத்தின் ... என நினைக்கிறேன். அரசு செய்வதை குறை சொல்லாமல் ஆக்கபூர்வமான யோசனை கூறுங்கள்....
Rate this:
Cancel
G. Madeswaran - MA,யூ.எஸ்.ஏ
01-ஏப்-202009:49:19 IST Report Abuse
G. Madeswaran Wow..India totally thinking different from the rest of the World Good native idea for a very quick treatment actions if major people affected without spending much cost and man power..we can clean trains later..
Rate this:
Cancel
01-ஏப்-202008:29:30 IST Report Abuse
ஆப்பு அசத்துங்க... இப்படியே அரசு பஸ்களையும் மாத்தலாமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X