பொது செய்தி

இந்தியா

தூய்மைப் பணியாளருக்கு மலர் தூவும் பொதுமக்கள்; வைரல் வீடியோ

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
sanitation workers, clapping hands, corona cases in india, coronavirus

பாட்டியாலா: கொரோனா அரக்கனை எதிர்த்து போராடி வரும், தூய்மை பணியாளர் ஒருவருக்கு, ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையிட்டும், மலர் தூவியும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் பஞ்சாபில் நடந்தது

கொரோனா எனும் கொடும் அரக்கனை, இந்தியாவிலிருந்து அகற்றும் பணியில், டாக்டர்கள், நர்ஸ்கள், போலீசார்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து, இந்த ஊரடங்கு காலத்தில் நாம் வீட்டிற்குள் இருந்தாலே போதும்.


latest tamil news
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலுள்ள நாபா பகுதியில் வசிப்பவர்கள் தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் செய்த செயல், அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அப்பகுதியில், துப்புறவு பணி செய்யும் தூய்மை பணியாளருக்கு மாலை அணிவித்தும், வீட்டின் மாடியிலிருந்து அவர்கள் மீது மலர் தூவியும், கைகளை தட்டியும் பாராட்டு தெரிவித்தனர். அதில் ஒருவர் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையை அவருக்கு அணிவித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - chennai,இந்தியா
01-ஏப்-202015:31:41 IST Report Abuse
Tamil தூய்மை பனி செய்பவர்கள் பங்கு இது போன்ற நேரங்களில் கண்டிப்பாக போற்றப்படவேண்டிய விசயம். அதே நேரம் தமிழ்நாட்டில் வலுக்கட்டாயமாக மாதம் ஒரு வீட்டிற்கு 50 ரூபாய் வசூல் நடைபெறுகிறது. அதில் பணம் கொடுத்தால் பணிவாகவும் பணம் கொடுக்காதவர்களிடம் குப்பை போட வரும்பொழுது திமிராகவும் பேசுவதால் பல இடத்தில அடிதடியில் முடிகிறது . பல தெருக்களில் வாரத்திற்கு இரண்டு முறை தான் வருவது அதும் நினைத்த நேரங்களை சிலசமயம் அதிகாலை சிலநேரம் மதியம் என்று வருவது. இப்படி வாரத்திற்கு இரண்டு முறை நினைத்த நேரத்தில் வருவதாலும் பலர் குப்பைகளை சேர்த்துவைக்காமல் தாங்களே குப்பை தொட்டிகளில் போடுவதால் மாதம் ஒரு கொடுக்கும் பணம் கொடுக்காததால் சில துப்பரவு தொழிலாளர்கள் அவர்களிடம் மரியாதையை குறைவாக பேசுவதும் மோதல்கள் உருவாக காரணமாக உள்ளது. இந்தியாவில் ஒரு மனநிலை என்னவென்றால் ஒரு சாரும் சைக்கிளும் இடித்துவிட்டால் தவறு சைக்கிள் ஓட்டுபவர் மேல் இருந்தாலும் நாம் கார் ஓட்டுபவர் மீது தான் குற்றம் கூறுவார்கள். அதே போல் தான் இங்கும். அனைவரும் குறை கூற முடியாது அதனால் துப்பரவு தொழிலார்களை ஒரேய பகுதியில் அனுப்புவதை தவிர்த்து வாரம் ஒரு முறை அதே ஏரியாவில் தெருக்களை மாற்றி அனுப்புவதால் பல மோதல்களை தவிர்க்கலாம். வாரம் ஒரு முறை மாற்றுவதால் சில அடாவடிகள் தவிர்த்து நல்ல துப்பரவு தொழிலார்கள் பார்க்கும்பொழுது மக்களுக்கும் அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படும்.
Rate this:
Cancel
M.P.Madasamy - Trivandrum,இந்தியா
01-ஏப்-202013:25:02 IST Report Abuse
M.P.Madasamy கும்பிடுவதும் ,கைதட்டுவதும்,ஒலி எழுப்புவதும் ,மலர்தூவி பாராட்டுவதும் கொரோனா நன்கொடையாக கொடுத்த குணமாக அல்லாமல் எதிர்காலத்தில் மனித மனங்களில் செழித்து வளரப்போகும் பண்புகளுக்கு இட்ட விதையாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
01-ஏப்-202012:06:18 IST Report Abuse
sundarsvpr இரா பாலா அவர்களுக்கு நன்றி. மத்தியில் மோடி அரசையும் மாநிலத்தில் பழனிச்சாமி அரசையும் குறை கூற தி மு க சார்பு தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளன. சொல்லி தெரிவதில்லை மன்மதக்கலை. நிறுவனங்கள் பெயர்கள் மக்கள் அறியும். பழனிச்சாமி அரசு கூட விவாதமேடைகளை தவிர்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X