பொது செய்தி

இந்தியா

பிரதமர் நிதிக்கு ரூ.1,031 கோடி வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள்

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
pm cares fund, pm cares fund link, coronavirus india, oil companies india, Coronavirus helpline, donation,
,நன்கொடை,பிரதமர்,நிவாரணநிதி

புதுடில்லி: கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவிக்காக, பிரதமர் நிவாரண நிதிக்கு, எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1,031 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளன.

கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவி வழங்க, மத்திய அரசு, PM-CARES Fund எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியத்தை துவக்கியுள்ளது. இதில் திரட்டப்படும் தொகை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.

மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று பிரபலங்களும், நிறுவனங்களும், பொதுமக்களும் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நிதிக்கு, எண்ணெய் நிறுவனங்கள், ரூ.1,031 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளன.


latest tamil news



இதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: பிரதமர் நிதிக்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1031.29 கோடி பங்களிப்பு வழங்குவது மகிழ்ச்சியையும், நன்றியையும் கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


எவ்வளவு?


பிரதமர் அவசர கால நிவாரண நிதிக்கு, பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி., ரூ.300 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஐ.ஓ.சி., ரூ.225 கோடியும், பாரத் பெட்ரோலியம் ரூ.175 கோடியும், இந்துஸ்தான் பெட்ரோலியம் ரூ.120 கோடியும் வழங்குகின்றன.


latest tamil news



பெட்ரோநெட் எல்.என்.ஜி., ரூ.100 கோடியும், கெயில் ரூ.50 கோடியும், ஆயில் இந்தியா ரூ.38 கோடியும் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
01-ஏப்-202017:20:13 IST Report Abuse
karutthu கொரோன விற்காக பாரத் பெட்ரோலியம் ரூ.175 கோடியும், இந்துஸ்தான் பெட்ரோலியம் ரூ.120 கோடியும் வழங்குகின்றன. இந்த பொன்முட்டையிடும் வாத்தை தான் மத்திய அரசு விற்க துடிக்கிறது
Rate this:
Cancel
M.P.Madasamy - Trivandrum,இந்தியா
01-ஏப்-202013:34:32 IST Report Abuse
M.P.Madasamy தனியாருக்கு தாரை வார்ப்பதிலிருந்து தற்காத்து கொள்வதற்காக வாரி வழங்கி தங்களை தனிமைப்படுத்தி கொள்கின்றன இந்த நிறுவனங்கள் என்று எண்ணத்தான் தோன்றுகிறது.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
01-ஏப்-202013:10:45 IST Report Abuse
Rajas நிதியே இவ்வளவு வழங்குகிறார்கள் என்றால் இவர்கள் கையில் பல லட்சம் கோடி ரூபாய்கள் இருக்கும் போல தெரிகிறது. உடனடியாக இவர்களின் கணக்கை தணிக்க செய்து அத்தனை பணத்தையும் கைப்பற்ற வேண்டும். இவர்களிடம் இருக்கும் பணத்தை கொண்டே கொரானாவின் அத்தனை பாதிப்பையும் சரி செய்யலாம் போலிருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X