சி.என்.என் செய்தி தொகுப்பாளருக்கு கொரோனா ..!

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
CNN, ChrisCuomo, coronavirus, CNN anchor Chris Cuomo, cnn anchor corona
சிஎன்என், கொரோனா, கொரோனாவைரஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபலமான சி.என்.என் டிவி சேனலில் செய்தி தொகுப்பாளராக பணிபுரியும் கிறிஸ் குவோமோவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

சீனாவில் துவங்கி உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா அமெரிக்காவை ஆட்டி படைத்து வருகிறது. அமெரிக்காவில் தற்போது வரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 1 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளது. நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோவின் சகோதரரான கிறிஸ் குவோமோவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், தற்போது நலமாக இருப்பதாகவும், இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'கியூமோ பிரைம் டைம்' நிகழ்ச்சியில் தனது வீட்டில் இருந்து பங்கேற்பாரென சி.என்.என் அறிவித்துள்ளது.


latest tamil newsதனக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து டிவிட்டரில் கிறிஸ் குவோமோ,'இந்த கடினமான நேரத்தை மேலும் கடினமாக்கும் வகையிலும், சிக்கலாக்கும் வகையில் இந்த நாள் அமைந்து விட்டது. இப்போது தான் எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. சமீபகாலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மக்களுக்கு வெளிப்படுத்தி வந்தேன் . எனக்கு காய்ச்சல், குளிர் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தது. நான் இதை குழந்தைகளுக்கும் கிறிஸ்டினாவுக்கும் கொடுக்கவில்லை என்று நம்புகிறேன். அது இந்த நோயை விட மோசமாக உணர வைக்கும். என் வீட்டில் அடித்தளத்தில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். இங்கிருந்து என்னுயை நிகழ்ச்சி தொடரும். நாம் அனைவரும் புத்திசாலித்தனத்துடன் , கடினமான மற்றும் ஒற்றுமையாக இருப்பதன் மூலம் இதை வெல்வோம்!' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நியூயார்க்கில் உள்ள சி.என்.என் செய்தி சேனல் தலைமை அலுவலகத்தில் இதுவரை 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பெரும்பாலான சி.என். என் ஊழியர்கள் பல வாரங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வீடு மற்றும் சிறிய ஸ்டுடியோக்களில் இருந்து பணியாற்றி வந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
01-ஏப்-202010:18:34 IST Report Abuse
 Muruga Vel Amerikka supposed to be developed country
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X