பொது செய்தி

தமிழ்நாடு

டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு வேண்டுகோள்

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (92)
Share
Advertisement
Corona, coronavirus, Tamil Nadu, coronavirus update, coronavirus in TN, Tamil Nadu news, confirmed cases, tablighi jamaat corona, delhi coronavirus,
கொரோனா, முஸ்லீம்மாநாடு, சுகாதாரத்துறை, தமிழகஅரசு

புதுடில்லி: டில்லியில் நடந்த நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் யாரேனும், கொரோனா பரிசோதனை செய்யாதவர்கள், உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

டில்லியில் நடந்த நிஜாமுதீன் தபிலிஹி மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1,131 பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அதில், 523 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணமுடியவில்லை. நேற்று(மார்ச்31) ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் 50 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் தாங்களாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர்களது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


latest tamil news


இந்நிலையில், சமூக வலைதளங்கள் மூலமாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒவ்வொரு குடிமகனின் ஆரோக்கியமும் நமக்கு முக்கியம். கடந்த மார்ச் மாதம் 8 ம் தேதி முதல் 20ம் தேதி வரை, டில்லியில் நடந்த நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டோருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அபாயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட யாரேனும், இன்னும் கொரோனா பரிசோதனைக்கு உங்களை உட்படுத்தி கொள்ளவில்லை எனில் உடனடியாக 7824849263, 044 46274411 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Chennai,இந்தியா
01-ஏப்-202019:21:53 IST Report Abuse
Kannan அரசிடம் நிச்சயமாக கலந்து கொண்டவர்கள் பெயர் மற்றும் இருக்கும் விலாசம் கிடைத்திருக்கும். வழக்கம் போல் மைனாரிட்டி வோட்டுக்காக மற்றவர்களின் உயிர் பணையம் வைக்கவேண்டாம். ஏன் அரசு இந்த நபர்கள் பெயரை வேலிட தயங்கு கிறது? அவ்வாறு வெளியிட்டால் பக்கத்துக்கு வீட்டு மற்றும் அந்த தெருவில் உள்ளவர்கள் உஷாராகி அவர்களை காத்து கொள்ள லாமே? டெல்லி போலீஸ் நமது அரசுக்கு இந்த நபர்கள் லிஸ்ட் கொடுத்த தாக செய்தி. அரசு வெளியிடட்டும் சமுதாய நலன் கருதி.
Rate this:
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
01-ஏப்-202018:42:52 IST Report Abuse
Nalam Virumbi இந்த சூழலில் முசுளும் கடைகளில் பொருள் வாங்குவது மற்றும் அவர்களைக் கண்டால் சற்று விலகி செல்வது ஆகியவற்றைக் கடைப் பிடிக்கலாம்
Rate this:
Cancel
vivek c mani - Mumbai,இந்தியா
01-ஏப்-202017:28:45 IST Report Abuse
vivek c mani சட்டத்திற்குமுன் அனைவரும் சமம். வேண்டுகோள் ஒரு தடவையுடன் நிறுத்திக்கொண்டு இணங்காதவர்களுக்கு தண்டனை கொடுப்போம் என அறிவிக்க வேண்டிய நேரமிது. தாம் அழியார் எனும் நிலைப்பாட்டை கொண்டு இவரும் அழிவர், இவர் சுற்றமும் அழியும், சுற்றியுளோரும் அழிவர், நாடும் அழியும் எனும் துர்பாக்கிய நிலைக்கு மக்களை தள்ள வேண்டாம். கான்செர், சரிடோன் சாப்பிட்டால் சரியாகாது. வேறு அறுவை சிகிச்சையோ அல்லது தீவிர சிகிச்சையோ தேவை. அரசு தயங்கக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X