பொது செய்தி

இந்தியா

பி.எப்., புதிய விதிமுறைபடி இனி பணம் எடுக்கலாம்

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
EPFO, PF, Provident Fund, provident fund rate, Finance ministry
 பிஎப், 75சதவீதம், விதிமுறை,

புதுடில்லி: திருத்தப்பட்ட புதிய விதிமுறைபடி தொழிலாளர்கள், பி.எப்., கணக்கில் 75 சதவீதம் வரை அல்லது மூன்று மாத அடிப்படை சம்பளம், இவற்றில் எது குறைவோ, அதை, முன்பணமாக எடுத்துக் கொள்ளும் நடைமுறை அமலுக்கு வந்தது. அது தொடர்பாக தொழிலாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், தொழிலாளர்கள், அதிகபட்சமாக மூன்று மாத அடிப்படை ஊதியத்தை பெறுவதற்கு வகை செய்வதற்கான அரசாணையை, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் மார்ச் 30ல் வெளியிட்டது. கடந்த வாரம், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், 1.70 லட்சம் கோடி ரூபாய் நிவாரண உதவி திட்டங்களை அறிவித்தார். அவற்றில், 'ஒரு தொழிலாளர் தன் பி.எப்., கணக்கில் செலுத்தியுள்ள தொகையில், 75 சதவீதம் வரை அல்லது மூன்று மாத அடிப்படை சம்பளம், இவற்றில் எது குறைவோ, அதை, முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். அத்தொகையை திரும்ப செலுத்தத் தேவையில்லை' எனவும் அறிவித்திருந்தார்.


latest tamil news


இதற்காக, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், 1952ம் ஆண்டின், தொழிலாளர் வருங்கால நிதி திட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. புதிய விதிமுறை, மார்ச், 28 முதல் அமலுக்கு வந்துள்ளதாக, தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பி.எப்., திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
01-ஏப்-202016:14:59 IST Report Abuse
vnatarajan 1 மினிமம் எத்தனை மாதம் பி எப் கட்டியிருக்கவேண்டும், 2 ஒரு முறைக்குமேல் 75 % எடுக்கலாமா.?
Rate this:
Cancel
S Lakshmana Kumar - thiruvarur,இந்தியா
01-ஏப்-202011:33:13 IST Report Abuse
S Lakshmana Kumar if theway of retrieving fund is easy. This will be helpful to many of the people for the next few days.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
01-ஏப்-202011:17:42 IST Report Abuse
பாமரன் தன் பணத்தை திரும்ப எடுக்கும் வகையில் ரூல் திருத்தப்பட்ட விஷயத்தில் நிம்மியம்மா நிவாரணம் குடுத்த மாதிரி பீப்பி ஊதறது தேவைதானா...???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X