பொது செய்தி

இந்தியா

டில்லி மாநாட்டில் பங்கேற்ற 95% பேரிடம் பரிசோதனை: உ.பி., அரசு

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
Uttar Pradesh, Tablighi Jamaat, tablighi jamaat corona, yogi adityanath coronavirus, Delhi, Nizamuddin, உத்தரபிரதேசம், டில்லிமாநாடு, முஸ்லீம்கள்,

லக்னோ: டில்லி நிஜாமுதீன் முஸ்லீம் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 95 சதவீதம் பேரை கண்டறிந்து பரிசோதனை செய்துள்ளதாக உத்தர பிரதேச உள்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த நிஜாமுதீன் தபிலிஹி மாநாட்டில் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றதும் அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு சோதனை செய்ய தமிழகம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த 1,131 பேர் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என கூறப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 523 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணமுடியவில்லை.


latest tamil news


அதேபோல், உ.பி.,யில் நிஜாமுதீன் முஸ்லீம் மாநாட்டில் சுமார் 157 பேர் பங்கேற்றதாக வந்த தகவலையடுத்து 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளன. இது தொடர்பாக உ.பி., மாநில உள்துறை செயலர் அவனிஷ் அவஸ்தி நிருபர்களிடம் கூறியதாவது: டில்லி நிஜாமுதீன் முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 95 சதவீதம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் மாதிரிகளை நாங்கள் பரிசோதித்துள்ளோம். கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இன்னும் 10 முதல் 12 பேர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அதிகாரிகளுடன் ஒத்துழைக்காதவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashok kumar - coimbatore,இந்தியா
01-ஏப்-202019:03:45 IST Report Abuse
ashok kumar உ.பி ல ஒரு மாநாடு. டில்லில ஒரு மாநாடு...முடியலை சாமி
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
01-ஏப்-202018:40:24 IST Report Abuse
Nallavan Nallavan சென்றுவந்தவர்கள் மருத்துவ சோதனைக்கு 99 % உட்படுத்திக்கொண்டார்கள் என்றால் கூட அவர்கள் தொடர்பில் எத்தனை பேர்கள் இருந்தார்கள் ? அவர்கள் எங்கு எங்கு சென்றார்கள் என்று ஜெவ்ரிஹுலாவல் சொல்லமுடியுமா ? அல்லது அவர்களை கண்டுபிடித்து சோதனைக்கு உட்படுத்தமுடியுமா ? இது இந்தியாவிற்கு , தமிழ்நாட்டுக்கு மிக பெரிய சாவல் இதனால் மாநாட்டிற்கு சென்றுவந்தவர்கள் அவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் எல்ல்லோரையும் அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு ஜவாருல்லாவிற்கு இருக்கிறது
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
01-ஏப்-202018:39:18 IST Report Abuse
Nallavan Nallavan நிஜாமுதீன் என்கிற இடத்தில் நடைபெற்ற தப்லீக் முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு முஸ்லிம்கள் மூலம் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு பரவி யாரெல்லாம் இந்தியாவின் மற்ற பாகங்களுக்கு சென்றார்களோ அவர்கள் மூலம் அதிகம் பரவியுள்ளது குறிப்பாக தமிழ்நாட்டில் மிக அதிகமாக பரவியுள்ளது இதை பெருபாலான ஊடகங்கள் தங்கள் செய்திகளில் பலமுறை தெரிவித்து உள்ளது தமிழக அரசின் அறிவிப்பில் எந்த தவறும் இல்லை இதை ஏன் ஜவஹருல்லா மறைக்க பார்க்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X