கொரோனா வைரஸ் பார்வையிலிருந்து தப்பியுள்ள நாடுகள் எது தெரியுமா?

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவி 8 லட்சம் மக்களை தொற்றியுள்ளது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. இந்நிலையில் உலகின் சில நாடுகள் கொரோனா வைரஸ் பார்வையிலிருந்தும் தப்பியுள்ளன. அவை பெரும்பாலும் சிறிய தீவுகளாக உள்ளன.



latest tamil news


அப்படி ஒரு தீவு தேசம் தான் பலாவ். பசிபிக் பகுதியில் அமைந்துள்ள பலாவ் தீவு, 18,000 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இங்கு யாருக்கும் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை. பலாவ், பரந்த பசிபிக் கடல் பகுதியால் சூழப்பட்டுள்ளது. இங்கிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு எந்த நாடுகளும் கிடையாது. கடலில் ஒரு புள்ளியாக இது இருப்பதால் கொரோனாவிடமிருந்து தப்பியுள்ளது. இதே போல டோங்கா, சாலமன் தீவுகள், மார்ஷல் தீவுகள் மற்றும் மைக்ரோனேஷியா உள்ளிட்ட பல குட்டி நாடுகளுக்கு, தொற்றுநோயை தடுக்க, கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் உதவியுள்ளன.


latest tamil news


தீவு தேசங்கள் மட்டுமின்றி, சமோவா, துர்க்மெனிஸ்தான், வட கொரியாவும் இப்பட்டியலில் அடங்கும். ஆனால் வடகொரியா ஒரு மர்ம தேசம் என்பதால், அது தகவல்களை மறைந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
அண்டை நாடுகள் ஏதுமின்றி, தொலைதூரத்தில் இருப்பது மட்டும் வைரஸிடமிருந்து காப்பாற்றுமா என்றால், இல்லை என்றே கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. வடக்கு மரியானா தீவுகள் (பலாவின் வடக்கே) கடந்த வாரம் முதல் கொரோனாவை உறுதிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து திங்களன்று ஒருவர் கொரோனாவுக்கு இறந்தாக கூறப்படுகிறது.
பலாவ் தீவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கூறுகையில், வூஹான், நியூயார்க், மாட்ரிட்டுக்கான விதியிலிருந்து நாங்கள் தப்பிப்போம். எங்களிடம் போதுமான மருத்துவ வசதிகளும் உள்ளது என்கிறார்.


latest tamil news



கவலையில்லாத கண்டம்


விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், பலாவ் தீவுகளுக்கு கிடைக்கும் பொருட்கள் விநியோகம் குறைந்துள்ளது. விரைவில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படும். சுற்றுலா வருவாயை மட்டுமே நம்பியிருக்கும் இது போன்ற தீவுகளுக்கு, ஏற்கனவே வருமானம் நின்று போய்விட்டது. வைரஸால் நேரடி பாதிப்பில்லை என்றாலும், அதன் தாக்கம் இருக்கவே தான் செய்கிறது. இப்போதைக்கு கவலையில்லாத கண்டம் என்றால் அது மக்கள் வசிக்காத அண்டார்டிகா கண்டம் மட்டும் தான்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
02-ஏப்-202015:58:38 IST Report Abuse
ocean kadappa india நித்தி இந்தியாவில் இருந்திருந்தால் இந்தியாவுக்குள் குரோனா தலை காட்டி இருக்காது.
Rate this:
Cancel
01-ஏப்-202017:17:41 IST Report Abuse
ஆப்பு பழைய சோவியத் யூனியனிலிருந்து பிரிஞ்ச டுர்க்மெனிஸ்தானில் கொரோனா பாதிப்பு இல்லை. அங்கே மக்கள் மாஸ்க் அணிவதும், கொரோனா பற்றி பேசுவதும் தடை செய்யப் பட்டுள்ளது. மக்களின் தொலை பேசியும் ஒட்டுக் கேட்கப்படுகிறது. மீறினால் கடும் தண்டனையாம். கூகுளித்துப் பாருங்க.
Rate this:
Cancel
Sridharan Venkatraman - Chennai,இந்தியா
01-ஏப்-202017:13:41 IST Report Abuse
Sridharan Venkatraman கைலாசா எப்படி இருக்கிறது....?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X