பொது செய்தி

இந்தியா

தைரியமாக கடமையை செய்யுங்கள்: அன்றே சொன்ன விவேகானந்தர்

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
actor vivek tamil, swami vivekananda, tamil news, tamil nadu news, 
 நடிகர்விவேக், விவேகானந்தர்

சென்னை: இப்போது, உலக நாடுகளையும், இந்தியாவையும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. இதேபோன்ற ஒரு சூழ்நிலை, கடந்த 1898 ல் கோல்கட்டாவில் பிளேக் தொற்று நோய் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. சில இடங்களில் எடுக்கவும் விநியோகிக்கவும் ஏஜென்ட்களும், பேப்பர் பயன்களும் பயப்படுகின்றனர். செய்தி தாள் மூலம் கொரோனா பரவாது என்று, டாக்டர்கள் தெரிவித்த பிறகும் இந்த பயம் நீடிக்கிறது. இப்படி பயப்படுபவர்கள் எந்த பயமும் இல்லாமல் தங்களது கடமையை செய்ய வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் அன்றே கூறியிருக்கிறார்.

விவேகானந்தரின் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் அடங்கிய புகைப்படத்தை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், 1898ல் கல்கத்தாவில் பிளேக் தொற்றுநோய் பரவி மக்கள் மரண பயத்தில் இருந்த போது நிவாரண பணியில் இருந்த சுவாமி விவேகானந்தர் எழுதி அச்சிட்டு வினியோகித்த அறிக்கை பாருங்கள். இன்றும் பொருந்துகிறது.! That is y He is the inspiration for many great leaders! My Hero too🙏🏼

என தெரிவித்துள்ளார்.


latest tamil news
latest tamil news
latest tamil newsமற்றொரு டுவிட்டர் பதவில், 1898 ல் கோல்கட்டாவில் பிளேக் நோய் பரவிய போது, சுவாமி விவேகானந்தர் விநியோகித்த நோட்டீசை பார்த்து போது ஆச்சர்யமாக உள்ளது. 122 ஆண்டுகள் தாண்டி, அதேபோன்ற பிரச்னையை தற்போது சந்தித்து வருகிறோம். இன்றும் விவேகானந்தரின் பலம் கொடுக்கும் வார்த்தைகள் நமக்கு ஆதரவை அளிக்கிறது. இந்தியா எழுச்சி பெறும் என தெரிவித்து, விவேகானந்தரின் வாசகம் அடங்கிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், தொற்று நோய் பரவலின் போது, கோபம் மற்றும் காமம் ஆகியவற்றில் இருந்து விலகி இருங்கள். வதந்திகளுக்கு செவி சாய்க்க வேண்டாம். மனதை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள். நாம் அனைவரும் தூய்மையான மற்றும் எளிமையான வாழ்வு வாழ்வோம். நோய், பயம், தொற்று நோய் போன்றவை, கடவுளின் எல்லையற்ற கருணையில் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில், மெல்லிய காற்று போல் கரைந்துவிடும்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது, நாங்களும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நீங்கள் துன்பப்படும் போது, நாங்களும் துன்பப்படுகிறோம்.. இந்த மோசமான, கடுமையான காலகட்டத்தில், உங்கள் நலனுக்காகவும், நோயில் இருந்து உங்களை காக்கவும், நோய்தொற்று அச்சத்தை போக்கவும் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். பிரார்த்தனை செய்கிறோம். எனக்கூறப்பட்டுள்ளது.


latest tamil news
மற்றொரு டுவிட்டர் பதிவில், விவேகானந்தர் குறித்து எனது டுவிட்டர் பதிவை பாருங்கள். இது மக்களின் மனதில் இருந்து பயத்தை அகற்றும். வைரசை விட பயமே மரணத்தை ஏற்படுத்தும். அது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும் என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஏப்-202017:15:02 IST Report Abuse
ஆப்பு கடமையைச் செய்யவேணாம்னு விவேகானந்தரை யாரும் முடக்கலே. இங்கே வீட்டில் முடங்கிக் கிடப்பதே பெரிய கடமைன்னு உத்தரவு. வெளியே போனா, போலீஸ் தன் கடமையைச் செய்யறேன்னு லத்தியடி, தோப்புகரணம் எல்லாம். பாக்கலாம். இன்னும் எத்தனை நாள் கடமையை செய்யச் சொல்றாங்கன்னு. அடியே, பசிக்குது. சோறு வந்திருச்சா?
Rate this:
Cancel
vivek c mani - Mumbai,இந்தியா
01-ஏப்-202017:05:29 IST Report Abuse
vivek c mani மக்களின் நலத்தை பிரதானமாக கருத்தில் கொண்டு சுவாமி விவேகானந்தர் அருளிய வார்த்தைகள் பாலைவனத்தில் நீரை தேடி அலையும் ஒருவனுக்கு கிடைத்த ஒரு குடம் நீர் போலாகும். பண்டைய நாட்களிலிருந்தே ஹிந்து மத பண்பாடுகளில் ஒன்றானது, தன் சுகம் தவிர்த்து பிறர் துன்பம் போக்குக எனும் மந்திரமே. இதையே சுவாமி விவேகானந்தரும் கூறியுள்ளார். அவர் கூறியதை இந்த இக்கட்டான கால கட்டத்தில் நாம் தீவிரமாக பின்பற்றவேண்டும்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஏப்-202013:08:42 IST Report Abuse
Tamilan இந்த அளவுக்கு, இப்பயெல்லாம் மனிதகுலத்தில் நடக்கும் என்று இவர் அன்று கனவு கூட கண்டிருக்கமாட்டார். இந்தளவுக்கு அரசியல் சட்ட அரசுகளின் திறன் குறைந்திருக்கும் என்றும் நினைத்திருக்க மாட்டார் . எனினும் , இந்த நேரத்திலாவது அரசியல் சட்ட அரசுகளில் , மீடியாக்களில் உள்ளவர்கள் இவர்களை நினைவு கூர்வது வரவேற்கத்தக்கது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X