இலவசமாக வென்டிலேட்டர் கருவிகள் வழங்க தயார்: எலன் மஸ்க்| Elon Musk says he is ready to provide free ventilators | Dinamalar

இலவசமாக வென்டிலேட்டர் கருவிகள் வழங்க தயார்: எலன் மஸ்க்

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (5)
Share

வாஷிங்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு, இலவசமாக வென்டிலேட்டர் கருவிகளை வழங்க தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ.,வும் பில்லியனருமான எலன் மஸ்க் அறிவித்துள்ளார்.latest tamil news


உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.40 லட்சமாக அதிகரித்துள்ளது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்கா மிகவும் வலி மிகுந்த 2 வாரங்களை சந்திக்க போகிறதென அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் விதமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும், டெஸ்லா கார் நிறுவன சி.இ.ஓ.,வுமான எலன் மஸ்க் தனது டுவிட்டரில், ‛எங்களிடம் எப்.டி.ஏ ஒப்புதல் பெற்ற கூடுதல் வென்டிலேட்டர் கருவிகள் உள்ளன. அதனை, உலகம் முழுவதும் டெஸ்லா டெலிவரி பகுதியில் வருகின்ற மருத்துவமனைகளுக்கு அளிக்க தயாராக இருக்கிறோம். கருவியும், போக்குவரத்து செலவும் இலவசம். எங்கு நோயாளிகளுக்கு உடனடியாக வென்டிலேட்டர் தேவைப்படுகிறது என்பது தான் ஒரே கேள்வியாக உள்ளது. கிடங்கில் சேமிப்பதற்காக அல்ல. தயவு செய்து எனக்கோ அல்லது டெஸ்லா முகவரிக்கோ தெரியப்படுத்தவும்' என பதிவிட்டிருந்தார்.


latest tamil news


அமெரிக்காவின் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகரித்து வரும் நிலையில் வென்டிலேட்டர் கருவி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களும் வென்டிலேட்டர் தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளன. ஏற்கனவே கலிபோர்னியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆயிரம் வென்டிலேட்டர் கருவிகள், சானிடைசர் மற்றும் முகக்கவசத்தை டெஸ்லா நிறுவனம் சொந்தமாக தயாரித்து அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X