பொது செய்தி

தமிழ்நாடு

காஸ் சிலிண்டர் விலை குறைப்பு

Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை: மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து 2வது மாதமாக குறைந்துள்ளது. சென்னையில் ரூ.64.50 விலை குறைந்துள்ளது.



latest tamil news



தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன், இந்தியா முழுவதும் தினந்தோறும் 30 லட்சம் சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து 2வது மாதமாக மானியம் இல்லாத சிலிண்டரின் விலை குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.


latest tamil news




2 மாதங்களில் 2வது முறையாக


கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த மானியமில்லாத சிலிண்டர் விலை கடந்த மார்ச் மாதம் குறையத்தொடங்கியது. அதன்படி சென்னையில் இன்று (ஏப்.,01) முதல் மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை 64.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மார்ச் மாதம் ரூ.826 ஆக விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை, ரூ.761.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டில்லியில் ரூ.744, கோல்கட்டாவில் ரூ.774.50, மும்பையில் ரூ.714.50 விலையில் கிடைக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RGK - Dharapuram,இந்தியா
01-ஏப்-202018:54:36 IST Report Abuse
RGK செல்லாது செல்லாது ... மோடிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல ஏறுன திட்டிக்கலாம்
Rate this:
Cancel
01-ஏப்-202017:10:09 IST Report Abuse
ஆப்பு மூணு வேளை சாப்பாடு வீட்டுக்கே வந்துரும்னு எதிர்பார்க்கிறோம். வெளியே போனா பொல்லாப்பு. லத்தியடி எல்லாம். எதுக்கு கேஸ் வாங்கி, சமைச்சு, பாத்திரம் கழுவி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X