பொது செய்தி

இந்தியா

சுகாதார பணியாளர்களுக்கு ரூ.1 கோடி: கெஜ்ரிவால்

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
kejriwal, arvind kejriwal, covid 19, coronavirus, warriors, delhi, family, delhi cm, covid 19, health, india fights corona,  டில்லி, கெஜ்ரிவால், அர்விந்த்கெஜ்ரிவால், கொரோனா, கொரோனாவைரஸ், சுகாதாரபணியாளர்கள், டாக்டர்கள், நர்சுகள், நிதி

புதுடில்லி: கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் சுகாதார பணியாளர்கள், நாட்டை காக்கும் போர் வீரர்களுக்கு குறைந்தவர்கள் இல்லை என தெரிவித்துள்ள டில்லி முதல்வர் கெஜ்ரிவால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: போரின் போது, ஒவ்வொரு ராணுவ வீரரும் நாட்டை பாதுகாக்க தங்களது வாழ்க்கையை பணயம் வைப்பார்கள். அவர்களுக்கு ஒட்டுமொத்த தேசமும் கடன்பட்டிருக்கும். இன்று, சுகாதார பணியாளர்களின் பணியும், ராணுவ வீரர்களின் பணிக்கு குறைந்தது அல்ல. நாட்டு மக்களை பாதுகாக்க உங்களின் வாழ்க்கையை பணயம் வைத்துள்ளீர்கள்.


latest tamil news


நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என ஏற்கனவே டில்லி அரசு தெரிவித்துள்ளது. இன்று, மரியாதை நிமித்தம், ஒன்றை அறிவிக்க விரும்புகிறேன். எதிர்பாராத விதமாக எந்த சுகாதார பணியாளர்களாவது, அவர்கள் டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள் என யாராக இருந்தாலும் சரி, கொரோனா வைரசுக்கு எதிரான போரின் போது உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும். அவர்கள், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்தாலும் சரி அவர்களுக்கு இது பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mithun - Bengaluru,இந்தியா
01-ஏப்-202020:04:44 IST Report Abuse
Mithun உன்னோட மாநிலத்துலேந்து தான் இந்தியா முழுவதும் கொரான பரவுணுச்சி. அத மறைப்பதற்கு நாடகமாடுகிறாய். கொரான பாதித்தவர்களுக்கு எல்லாம் நீ தான் நஷ்டயீடு கொடுக்கவேண்டும். உன்னுடைய அஜாக்கிரதையால் எத்தனை உயிர்கள் பலியாகிறது.
Rate this:
Cancel
01-ஏப்-202019:06:38 IST Report Abuse
மாயவரம் சேகர் நல்ல விஷயம்தான் .பணியாளர்களின் உயிரிழப்பிற்கு கொடுக்கலாம்.ஆனால் ராணுவத்தினர் போரில் எதிரிகளை கொல்ல அனுமதி உள்ளது போல் , இந்த வைரஸ்ஐ கட்டுபடுத்த ஒத்துழைக்காதவர்களிடம் அவர்கள் யாராக இருந்தாலும் அபராதமாக ஒரு தொகை வாங்கி அதையும் கொடுக்கலாம்.ஆனால் கேஜரிவால் செய்ய மாட்டார் . ஒத்துழைக்கதவர்களை கண்டித்து குரல் கொடுக்க மாட்டார்.ஆனால் அறிக்கை விட்டு விளம்பர அரசியல் செய்வார்.ஊடகங்கள் டெல்லி மாநாடு சம்பவத்தை விட்டுவிட்டு இதை பற்றி செய்தி போடும்.
Rate this:
Cancel
அருண் பிரகாஷ் சென்னை வெற்றி பெற வைத்த மக்களுக்கு கைமாறு செய்கிறேன் என்று நீங்கள் செய்த வேலை.அருமை.தப்பு பண்ணாதவன் மட்டும் நிரபராதி இல்லை,செய்யும் தப்பை மற்றவர் கண்டுபிடிக்கும் வரை அவர் நிரபராதி தான்.நீங்கள் நிரபராதி வேஷத்தில் உள்ள குற்றவாளி.ஜமாத் விஷயத்தை மறைக்க மறக்க வைக்க இந்த அறிவிப்பு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X