பொது செய்தி

இந்தியா

ரூ.4,500 கோடி இழப்பை சந்திக்கும் ஆன்லைன் வணிகத் துறை

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு, ரூ.4,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என சந்தை ஆராய்ச்சி நிறுவனமான பாரஸ்டர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


அத்தியாவசிய பொருட்கள் தவிர பிறவற்றை விற்பனை செய்ய, தடை உள்ளதால், வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, பிரிட்ஜ், ஸ்மார்ட் போன், ஆடைகள் போன்றவற்றின் விற்பனை முற்றிலுமாக நின்று போனது. ஆன்லைன் வணிக நிறுவனங்களின் வருவாயில் 70 சதவீதம் இப்பொருட்களின் விற்பனையை சார்ந்தே உள்ளதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.3,040 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டில் இந்திய ஆன்லைன் வணிக துறையின் மதிப்பு, 33.5 பில்லியன் டாலராக இருந்தது. 2020-ம் ஆண்டு இது 26 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கத்தால், ஆன்லைன் வணிக துறையின் வளர்ச்சி 20% சரிவடைந்து, வளர்ச்சி 5 சதவீதம் அளவிற்கு மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.


latest tamil news


உற்பத்தியாளர்கள் மற்றும் ஆன்லைன் சில்லறை வணிகர்களும் இதனால் பாதிப்பை சந்திப்பார்கள். ஆண்டு இறுதியில் வரும் திருவிழா காலங்களின் போதோ, அல்லது அடுத்த ஆண்டோ தான் இவை சரியாகும் என்கின்றனர். நிறைய இந்தியர்கள் மளிகை மற்றும் அழகு சாதன பொருட்களை ஆன்லைனில் வாங்க துவங்கியுள்ளனர். 2019-ல் ஆன்லைன் மூலம் 2 பில்லியன் டாலர் அளவுக்கு மளிகை பொருட்கள் விற்பனையாகியுள்ளது. இது மட்டும் இந்த ஆண்டு 30 சதவீதம் வளர்ச்சி காணும். இதனை பயன்படுத்திக்கொள்ள, ஷாப்க்ளூஸ், ஸ்னாப்டீல், சோமேட்டோ போன்றவையும் இதில் நுழைந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஏப்-202017:06:38 IST Report Abuse
ஆப்பு சில்லறை வணிகர்களுக்கு ஆன்லைன் வணிகம் வெச்சுது ஆப்பு.இப்போ அவிங்களுக்கு கொரோனா வெக்கிது பேராப்பு.
Rate this:
Cancel
01-ஏப்-202016:03:50 IST Report Abuse
தமிழ் போனால் போகட்டும். மக்கள் இருந்தால் தான் இவர்களுக்கு வியாபாரம்.மொத்தமாக இழப்பதைவிட தற்காலிகமாக இழப்பது மேல்.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
01-ஏப்-202016:02:51 IST Report Abuse
ஆரூர் ரங் குப்பைகளை வாங்கமுடியாததால் மக்களுக்கு லாபம்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X