பொது செய்தி

இந்தியா

கொரோனா: நாளை முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரசை தடுப்பதற்கான போராட்டத்தில் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடி, நாளை(ஏப்ரல் 2) அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்த உள்ளார்.



latest tamil news


இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு டில்லி நஜாமுதீனில் நடந்த தபிலீகி ஜமாத் நடத்திய மத பிரசங்க கூட்டம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, தபிலீகி ஜமாத் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்கள் தொடர்பு கொண்டவர்களை உடனடியாக கண்டறியந்து, கொரோனா பரவலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். டில்லி கூட்டத்தில் பங்கேற்றவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகப்படுத்தும் என்பதால், போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகள் செயல்பட வேண்டும். 21 நாள் ஊரடங்கை மாநில அரசுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.


latest tamil news


இந்நிலையில், நாளை (ஏப்.,2) காலை 11 மணிக்கு பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் முறையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, கொரோனா பாதிப்பு மற்றும் மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
01-ஏப்-202019:53:55 IST Report Abuse
தாண்டவக்கோன் சூடத்தெ கொளுத்தி கும்புட்டாக்கா கொரோனாவ ஒழிச்சிடலாம். 🔥
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
01-ஏப்-202017:59:32 IST Report Abuse
s t rajan மற்றவர்களும் பாதிக்கப் படுவார்களே என்ற நல்லெண்ணம் இல்லா வெறியர்களை என்ன செய்தால் தகும் ? இந்த இக்கட்டான நேரத்திலும் சில முஸ்லிம்கள் நம்நாட்டு சட்டதிட்டங்களை மீறிக் கூடி, பயணம் செய்து நோயற்ற அவதியுற வேண்டுமா? நல்ல தேங்கியுள்ள முஸ்லீம்கள் அவர்களுக்கு உணர்த்தலாமே.
Rate this:
Raj - nellai,இந்தியா
01-ஏப்-202019:28:42 IST Report Abuse
Rajமுதல் கொரோனா இந்தியாவில் ஜனவரி 30 இல் ஏற்பட்டது....
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
01-ஏப்-202017:27:57 IST Report Abuse
தாண்டவக்கோன் எல்லா State Government ங்களும் அவுங்களாவே ஆரம்பத்துலேந்து அவுங்களோட வேலய செஞ்சிட்டு இருக்காங்க, அதுல போயி கட்டைய போடவேணாம்
Rate this:
01-ஏப்-202018:44:56 IST Report Abuse
chandran, pudhucherry இங்கே இருந்தா எப்படி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X