கொரோனாவுக்கு ஆறுதல் மருந்தாகும் இசை..!

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

தென்கொரியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, சிறப்பு இசை நிகழ்ச்சியை இசைக்கலைஞர்கள் நடத்தினர்.



latest tamil news




கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ள மக்களுக்காக வயலின் இசைக்கலைஞரான வோன் ஹியூங் ஜூன் தனது வீட்டில் இருந்தப்படி, பாரம்பரிய வயலின் இசையை மீட்டி அதனை சமூகவலைதளங்கள் வாயிலாக நேரடியாக ஒளிப்பரப்பி வந்தார்.

இதனை கண்ட தென்கொரியாவின் மியோங்ஜி மருத்துவமனையில் கலை மற்றும் குணப்படுத்தும் மையத்தின் ஊழியரான லீ சோ யங், கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோருக்கு இசை நிகழ்ச்சி நடத்த முடியுமா என வோன் ஹியூங் ஜூனிடம் கேட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து மூதாட்டி, ஒரு பெண் மற்றும் அவரது மூன்று மாத குழந்தை என கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சிகிச்சை பெறும் அறைக்கு வெளியே ஹியூங் ஜூன் தலைமையிலான இசைக்குழுவினர் சிறப்பு இசை நிகழ்ச்சியை நடத்தினர்.


latest tamil news




தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் தங்கியுள்ள 3 பேரும் நேரலை ஒளிபரப்பின் மூலம் வயலின் இசை நிகழ்ச்சியை கேட்டு ரசித்தனர். கொரோனாவால் துவண்டு போயுள்ளவர்களுக்கு நம்பிக்கையும், வேண்டுதலையும் விதைக்கும் விதமாக ஆவ் மரியா இசை தொகுப்பு இசைக்கப்பட்டது. உலகளாவிய பிரச்னையான கொரோனாவை ஒன்றிணைந்து வெல்ல முடியுமென்பதை காட்டவே இதனை ஏற்பாடு செய்ததாக மருத்துவமனை ஊழியரான லீ சோ யங் தெரிவித்தார்.
வோன் ஹியூங்கின் இசையே கேட்ட போது, தான் மிகுந்த ஆறுதலை உணர்ந்ததாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பெண் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
01-ஏப்-202017:41:01 IST Report Abuse
Sampath Kumar நம்ம ஊரு நாதஸ்வரமும் மேளமும் மிக அற்புதமாக வேலை சேயும் கேட்டால் ப்ரூப் எங்கே என்று கேட்பார்கள் ? இசையை கேட்டு குணம் அடைந்தவர்களிடம் கேட்டு பாருங்கள் குரைந்த பட்சம் நோய்யாளிகள் இசை விரும்பிகளா இருந்தால் அய்யா i ராஜா அவர்களின் இசையை கேட்கலாம்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
01-ஏப்-202017:37:34 IST Report Abuse
வெகுளி சூப்பர்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X