பொது செய்தி

இந்தியா

இந்திய வம்சாவளி வைரஸ் ஆய்வு நிபுணர் கொரோனாவுக்கு பலி

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Indian origin, virologist, south africa, coronavirus, COVID 19, Geeta Ramji, corona updates, இந்தியா, வம்சாவளி, வைராலஜி, நிபுணர், கொரோனா வைரஸ், பலி

ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் இந்திய வம்சாவளி வைராலஜி ஆய்வு நிபுணரான கீதா ராம்ஜி, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா ராம்ஜி, டர்பனில் உள்ள தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (எஸ்.ஏ.எம்.ஆர்.சி) அலுவலகங்களின் மருத்துவ பரிசோதனை பிரிவு முதன்மை ஆய்வாளராகவும், எச்.ஐ.வி தடுப்பு ஆராய்ச்சி பிரிவின் பிரிவு இயக்குநராகவும் இருந்தார். இவர் 2012ல் வாழ்நாள் சாதனையாளர் விருது, 2018ல் தனித்துவமான பெண் விஞ்ஞானி விருதும் பெற்றுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்னதாக லண்டனிலிருந்து திரும்பிய கீதா ராம்ஜிக்கு எந்தவித கொரோனா அறிகுறிகள் தென்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அவர் திடீரென உயிரிழந்தார். இது குறித்து தெ.ஆப்ரிக்க மருத்துவ கவுன்சில் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிளேண்டா கிரே வெளியிட்டுள்ள அறிக்கையில், பேராசிரியர் கீதா ராம்ஜி, கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்னைகளால் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார், எனக் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


கிட்டத்தட்ட 50 வயதான கீதா ராம்ஜி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்காவின் மருந்தாளர் பிரவீன் ராம்ஜியை மணந்தார். இவர் 170க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். பல அறிவியல் இதழ்களுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். எச்.ஐ.சி., தடுப்பு ஆராய்ச்சிக்கான விருதினை கீதா பெற்றபோது, ‛பேராசிரியர் கீதா ராம்ஜி ஒரு உயர்ந்த எச்.ஐ.வி தடுப்பு ஆராய்ச்சித் தலைவராக இருக்கிறார், எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயைத் தடுப்பதற்கான உலகளாவிய பதிலுக்கு தொடர்ந்து பெரும் பங்களிப்பு செய்கிறார்,' என கிரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தெ.ஆப்ரிக்காவிலும் கொரோனா பாதிப்பு காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அமலாகியுள்ளதால், கீதாவின் இறுதி சடங்கு பற்றி அறிவிக்கப்படவில்லை. அங்கு இதுவரை கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. - Vilathikulam Pudur,இந்தியா
01-ஏப்-202020:37:38 IST Report Abuse
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. May her soul rest in peace. A great loss .
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
01-ஏப்-202020:02:30 IST Report Abuse
Subburamu Krishnaswamy Doing research with virus is like living with venomous snakes. Virus may mutate naturally at any time. Some avirulent virus may become virulent in course of time.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X