கொரோனாவை அறிவால் வெல்ல வேண்டும்: இம்ரான் மீண்டும் சர்ச்சை

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (43)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில், ஐந்தாம் இடத்தில் உள்ளது பாகிஸ்தான். அந்நாட்டில் கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,900க்கும் மேல் சென்றுள்ளது.


latest tamil news
கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, உலக சுகாதார அமைப்பின் அறிவுரைப்படி, பல்வேறு நாடுகளும், ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.latest tamil newsஇந்நிலையில், கடந்த 24ம் தேதி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் டி20 கிரிக்கெட் போட்டி போன்றது அல்ல; இந்த கொரோனா நெருக்கடி ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு தொடரக்கூடும். எனவே, அரசு தரப்பில் கவனமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. ஊரடங்கு உத்தரவு, பணிநிறுத்தம் ஆகியவை, உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்குவதை சீர்குலைக்கும். சமுதாயத்தின் ஏழை பிரிவினரைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். அவர்கள் ஊரடங்கின் போது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பர். நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்படும். அவர்கள் பொருளாதாரத்தின் சுமை களைத் தாங்க வேண்டியதில்லை. இவ்வாறு இம்ரான் தெரிவித்தார். இதற்கு, உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.


latest tamil news

அறிவால் வெல்ல வேண்டும்!


இந்நிலையில் இன்று (1ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்த இம்ரான்கான், 'ஊரடங்கு உத்தரவால் ஏழைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். அதனால், பாகிஸ்தானில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. வைரஸ் தொற்றை மக்கள் அறிவால் வெல்ல வேண்டும். கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துத் தான், வைரசைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கருதக்கூடாது' என, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


latest tamil news
இம்ரான்கானின் இந்த முடிவு குறித்து, 'மக்கள் தொகை மிகுந்த நாடுகளில், சமூக விலகல் மற்றும் மக்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டால் மட்டுமே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இம்ரான் அறிவித்திருப்பது அபத்தமானது மட்டுமல்ல மக்களுக்கு ஆபத்தானதும் கூட' என, சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
05-ஏப்-202002:54:30 IST Report Abuse
 nicolethomson இப்பவும் பிச்சை எடுக்கும் போஸ் தானா?
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
02-ஏப்-202017:57:59 IST Report Abuse
Jayvee அது சரி.. உங்களுக்குத்தான் பொது அறிவே கிடையாதே ..
Rate this:
Cancel
r ganesan - kk nagar chennai,இந்தியா
02-ஏப்-202011:38:20 IST Report Abuse
r ganesan இதுதான் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் ஒருவன் பாப்புலராக இருக்கிறன் என்பதற்காக அவனை அரசியலிலும் இழுத்துவிடுவதின் விளைவு, இது நமக்கும் ஒரு வார்னிங் மாதிரிதான்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X