டில்லி மாநாடு ; தெலுங்கானா சுகாதாரத்துறை எச்சரிக்கை

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

ஐதராபாத் : டில்லி மத கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்ததற்காக தெலுங்கானா அரசு எச்சரிக்கை விடுத்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.



latest tamil news




டில்லி நிஜாமுதீனில் உள்ள மார்க்கஸ் (மசூதியில்) மார்ச் 13-15 வரை மத கூட்டம் (மாநாடு) நடந்தது. இந்த மாநாட்டில் 200க்கும் மேற்பட்டவர்கள் வரை கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தெலுங்கானாவைச் சேர்ந்த 6 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு அவர்களுக்கு சோதனை செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் அதை மீறி இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்பாடு செய்தவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்றவர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.


latest tamil news




latest tamil news



இந்நிலையில் இது தொடர்பாக இன்று (ஏப்.,1) தெலுங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் கூறுகையில், டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, தெலுங்கானா முதலில் சிவப்புக்கொடியை காட்டியது. இந்த மாநாடு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு எச்சரிக்கை விடப்பட்டது. மாநிலத்தில் முதல்வர் அறிவுரை படி அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களுக்கு தடை விதிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 160 பேர் வரை யார் என்பது கண்டறியப்படவில்லை என தகவல்கள் வெளியாகின்றன. இம்மாநாட்டில் தெலுங்கானாவைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக மாநில அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. 160 பேரை தவிர மற்றவர்களை கண்டறிய முடிந்து அவர்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவல்களை 48 மணி நேரத்தில் பெற முடிந்தது எனில் அது, எங்கள் கண்காணிப்பு குழுக்களின் வலிமையை பிரதிபலிக்கிறது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Askar Meeran - Tirunelveli,இந்தியா
03-ஏப்-202011:12:35 IST Report Abuse
Askar Meeran s://www.facebook.com/hameed.hameedu/videos/2754391831313465/UzpfSTEwMDAwMDEzMTkyNDczNzozNDYzMjE0MjU3MDI2Mjcx/
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
02-ஏப்-202008:30:11 IST Report Abuse
Bhaskaran Oru thunai muthalvar Antha kootathilkalanthukondullaar illayenrukoorukiraar enruthagavalgaltherivikinrana
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஏப்-202000:15:28 IST Report Abuse
Tamilan இந்தமாநிலத்தில் இருந்து பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேல் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் . இங்குள்ளவர்களுக்கும் மற்றும் ஒவைசிக்கும் டில்லியில் உள்ளவர்களுக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடிக்கவேண்டும் . தேவைப்பட்டால் ஒவைசியை கைது செய்ய வேண்டும் . ஹைதராபாத்தில் உள்ள மற்றமதவாத கட்டிடங்கள் அனைத்திற்கும் நிரந்தரமாக சீல் வைக்க வேண்டும் . அப்போதுதான் இந்தமாதிரியெல்லாம் நடக்காது . ஹைதராபாத்தில் உள்ளவர்களுக்கும் உலகில் மற்ற மதவாத நாடுகளுக்கும் இருக்கும் தொடர்பை சொல்லித்தெரியவேண்டியதில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X