பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா: பாதிப்பு 234 ஆக உயர்வு

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
கொரோனா, தமிழகம், டில்லிமாநாடு, சுகாதாரத்துறை, பீலாராஜேஷ், corona, coronavirus, tamil nadu, health department, positive cases, confirmed cases, covid 19, tn news update

சென்னை: தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அனைவரும் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது: தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாங்களாக முன்வந்து தகவல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.தற்போதைய நிலையில், வீட்டு கண்காணிப்பில் 77,330 பேர் உள்ளனர். தமிழக அரசு அமைத்துள்ள தனிமைபடுத்துதல் முகாமில் 81 பேர் உள்ளனர். கண்காணிப்பு முடிந்தவர்கள் 4070 பேர். தமிழகத்தில் 17 ஆய்வகங்கள் உள்ளன. அரசு சார்பில் 11ம், தனியார் சார்பில் 6 ஆய்வகங்களும் உள்ளது. கூடுதலாக 6 ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news2826 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 234 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் டில்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள். அதில் ஒருவர் மியான்மர் மற்றும் இந்தோனேஷியவை சேர்ந்த தலா ஒருவர். டில்லி மாநாட்டில் பங்கேற்றதில் 80 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று 110 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், டில்லி மாநாட்டில் பங்கேற்ற 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று வேறு யாருக்கும் கொரோனா உறுதியாகவில்லை. 190 பேரும் 19 மாவட்டங்களை சேர்ந்தவர்கள். டில்லி மாநாட்டில் பங்கேற்ற 1103 தாங்களாக முன்வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நேற்று இரவில் இருந்து மருத்துவமனையில் உள்ளனர். 658 பேருக்கு பரிசோதனை நடந்துள்ளது. மற்றவர்களுக்கு நாளை பரிசோதனை நடத்தப்பட உள்ளது.


latest tamil newsதமிழகத்தில் போதிய அளவு மாஸ்க்குகள் உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் உடன் சென்றவர்கள் உள்ளவர்கள் தாமாக வந்து தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு உங்களின் நண்பன். உங்கள் நலனை காக்கப்படும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய உள்ளோம். அவர்கள் வசித்த பகுதியை தனிமைப்படுத்தி தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படாது. உள்ளே செல்லவும் அனுமதியில்லை.வயதானவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீட்டை விட்டுவரக்கூடாது. சமூக இடைவெளியை உறுதிப்புடத்த வேண்டும். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படும்

கொரோனா பாதித்த 190 பேர் 19 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
அவர்களின் விபரம்
கோவை - 28
திண்டுக்கல்- 22
தேனி -20
மதுரை -9
திருப்பத்தூர்-7
செங்கல்பட்டு - 7
நெல்லை - 6
சிவகங்கை -5
தூத்துக்குடி -2
திருவாரூர்-2
ஈரோடு- 2
காஞ்சிபுரம் - 2
கரூர் -1
சென்னை-1
திமலை- 1
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinoth - Hyderabad,இந்தியா
01-ஏப்-202023:05:49 IST Report Abuse
Vinoth ///டில்லி மாநாட்டில் பங்கேற்ற 1103 தாங்களாக முன்வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்// இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நாம் எல்லோரும் அவர்களை தேற்றி ஆறுதல் கூறவேண்டும். ஒரு சில புல்லுருவிகள் இருக்கத்தான் செய்வார்கள். இசுலாமிய அன்பர்கள் தாமாக முன்வந்து புல்லுருவிகளை அகற்ற வேண்டும்.
Rate this:
Cancel
01-ஏப்-202022:02:10 IST Report Abuse
Ganesan Madurai வரும் ரமலான் நேரத்தில் தினமும் சுடல சைகோ உப்புமா கம்மி கான்கிரஸ் கும்பல் தும்மல் ஜிஹாதிகளை சொறியான் அண்ணா கட்டுமரம் சொன்ன வழியில் பகுத்தறிவுபடி கட்டிபிடித்து கஞ்சிகுடித்து கொரோனாவை திருட்டு திராவிட முறையில் வீழ்த்தப்போகும் காட்சி இப்பவே கண்முன்களை கட்டுகிறது😂
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
01-ஏப்-202021:19:24 IST Report Abuse
Rasheel டில்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள், காட்டுமிராண்டிகள், தனக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்கள், செவிலியர்கள் மீது எச்சிலை உமிழ்வதாகவும், தவறான முறையில் நடப்பதாகவும், முறை இல்லாமல் பேசுவதாகவும் இன்றய செய்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X