பொது செய்தி

இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலா ரூ.50,000 பிரதமர் நிவாரண நிதி

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
PM CARES fund, lockdown, quarantine, 21 days curfew, judges, Supreme Court, sc judges, donation, india fights covid 19, நன்கொடை,பிரதமர்,நிவாரணநிதி

புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 33 பேர் தலா ரூ. 50,000 பிரதமர் நிவாரண நிதியாக வழங்க உள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவி வழங்க, மத்திய அரசு, PM-CARES Fund எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியத்தை துவக்கியுள்ளது. இதில் திரட்டப்படும் தொகை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நிதியுதவி செய்யும்படி, கடந்த, மார்ச் 28ம் தேதி, நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பலரும் தங்கள் பங்களிப்பை செய்து வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 33 பேர், தலா ரூ. 50,000 பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர். தொடர்ந்து அனைத்து 'கெஜடட்' அதிகாரிகளும், தங்கள், மூன்று நாள் சம்பளத்தையும், கெஜடட் அல்லாத அதிகாரிகள், இரண்டு நாள் சம்பளத்தையும், 'குரூப் சி' ஊழியர்கள், ஒரு நாள் சம்பளத்தையும், பிரதமரின் நிவாரண நிதிக்கு, நன்கொடையாக வழங்குவர். இந்த நன்கொடை, மார்ச் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என பதிவாளர் தெரிவித்திருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SARAVANAN G - TRICHY,இந்தியா
01-ஏப்-202022:14:14 IST Report Abuse
SARAVANAN G கணக்கு புலி, நிதியரசர் சாமி என்ன கொடுத்தார் என தெரியவில்லை
Rate this:
Cancel
01-ஏப்-202020:00:49 IST Report Abuse
chandran, pudhucherry நண்பர்களே நான் என்னுடைய ஒரு மாத சம்பளத்தை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கொரணா ஒழிப்பு நிதிக்கு வழங்கியுள்ளேன். நமது மாண்புமிகு நீதிபதிகள் வழங்கியதைபோல் மூன்று மடங்குக்கும் மேல்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
01-ஏப்-202019:41:19 IST Report Abuse
வெகுளி டில்லியில் மாநாடு நடத்திய பெரியவர்கள் கொரோனா நிவாரண நிதி அள்ளி கொடுத்திருப்பாங்கன்னு நம்பலாம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X