கேரளாவில் மேலும் 24 பேருக்கு கொரோனா ; பினராயி விஜயன்

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

திருவனந்தபுரம் : கேரளாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.



latest tamil news



கொரோனா வைரஸின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கத்திற்கு உயிர்கள் பலியாகும் நிகழ்வும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கேரளாவிலும் கொரோனாவின் தாக்கத்திற்கு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இன்று (ஏப்.,1) முதல்வர் பினராயி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


latest tamil news



அதில் அவர் கூறியதாவது : கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்நிலையில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் காசர்கோட்டில் இருந்து 12 பேர், எர்ணாகுளத்தில் இருந்து 3 பேர், திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 2 பேர் என மொத்தம் 8 பேர் மற்றும் பாலக்காட்டில் இருந்து ஒருவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய சோதனையில் 7 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் 191 பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளத்திற்கு வந்தவர்கள் எனவும், 67 பேர் சமூக பரவல் (நோய் தொற்று) உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்ததால் பரவியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகள் மூலம் கேரள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
02-ஏப்-202017:52:41 IST Report Abuse
Jayvee கேரளா சாதித்திவிட்டது.. விஜயன் மிக சிறந்த அறிவாளி என்று அவசரப்பட்டு புகழ்ந்து தள்ளிய பத்திரிக்கை மீடியாக்களை என்ன செய்வது..
Rate this:
Cancel
02-ஏப்-202002:07:02 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா இந்தியாவின் சீனா அரசு கேரளம். வளர்ச்சியில் அல்ல தன் சுய நல எண்ணத்தில்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
01-ஏப்-202019:38:16 IST Report Abuse
வெகுளி 7 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு இங்கு என்ன வேலை?..... பாதிக்கப்பட்ட அவர்களை உடனே பாதுகாப்பாக நாடு கடத்துங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X