கொரோனா எதிர்ப்பு மருந்து ஆய்வில் முன்னேற்றம்; சீன விஞ்ஞானி

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

பெய்ஜிங்: கொரோனா தொற்று வைரஸ், சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் 44 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இந்நோயை ஒழிப்பதற்காக, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா நாடுகளின் விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடிப்பதற்காக தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.



latest tamil news



இந்நிலையில், பெய்ஜிங், சிங்குவா பல்கலை விஞ்ஞானி ஜாங்லிங்கி கூறியதாவது:“கொரோனா தொற்று வைரஸுக்கு எதிராக தீவிரமாக எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகள்(நோயை எதிர்க்கும் ரத்தத்தில் உள்ள புரோட்டீன் அல்லது நோய்எதிர்பொருள்) உருவாக்கியுள்ளோம். இந்த ஆன்டிபாடிகள் மனித செல்லினுள் நுழைவதை தடை செய்கிறது. இதன் மூலமாக கோவிட்-19 தொற்றுள்ளவர்களுக்கு பயனுள்ள வகையில் சிகிச்சை அளிக்க முடியும். இம்முறை தற்போது கொரோனாவுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சையை விட சிறப்பானதாக இருக்கும். பிளாஸ்மா ஆன்டிபாடிகளை பயன்படுத்தலாம். ஆனால், அவை ரத்த வகையால் கட்டுப்படுத்தப்படுகின்றன.


latest tamil news



20 ஆன்டிபாடிகளை சோதனை செய்ததில், 4 ஆன்டிபாடிகள் வைரஸ் தொற்றை எதிர்க்கும் திறன் பெற்றிருந்தன. அவற்றில் 2 ஆன்டிபாடிகள் மிகுந்த திறனுடன் செயல்பட்டன. சோதனை அளவில் உள்ள இந்த ஆய்வு, முதலில் விலங்குகளுக்கும், 6 மாதத்திற்கு பிறகு மனிதர்கள் மீது செலுத்தி சோதனை செய்யப்படும். எங்கள் குழு யு.எஸ். ப்ரி பயோசயின்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அடுத்தகட்ட ஆய்வை மேற்கொள்ளும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தர் - Rajapalayam,இந்தியா
01-ஏப்-202023:22:24 IST Report Abuse
சுந்தர் கொரோனாவையும் பரப்பி அதுக்கு மருந்தையும் கண்டுபிடிச்சி கொடுத்து கல்லா கட்ட கெளம்பிட்டாங்கய்யா
Rate this:
Cancel
r.s.manish - chennai,இந்தியா
01-ஏப்-202022:18:25 IST Report Abuse
r.s.manish Adukula aduva poivedum
Rate this:
Cancel
01-ஏப்-202021:32:22 IST Report Abuse
Balamurugan B என்னும் கொஞ்ச நாளில் மருந்து (ஏற்கனவே தயாரிக்க பட்ட) தயாராகும் , சீனாவின் வேலை போல் தான் தெரிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X