கொரோனா அச்சுறுத்தல்: இந்துக்களிடம் பாகுபாடு பார்க்கும் பாக்.,

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Discrimination, pandemic, Pakistan,food, Hindus, coronavirus, கொரோனாவைரஸ்,கொரோனா, பாகிஸ்தான், சிறுபான்மையினர், இந்து, பாகுபாடு

கராச்சி : கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் நிலையிலும் மதரீதியில் பாகுபாடு காட்டுவதற்கு பாகிஸ்தான் முன்னுரிமை அளித்து வருகிறது. கொரோனாவால் நாடு முடக்கப்பட்டதால், உணவு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை கிடைக்காமல் அவதிப்படும் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு பாகுபாடு காட்டும் அந்நாட்டு அதிகாரிகள், பெரும்பான்மையிருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானையும் மிரட்டி வருகிறது. 2,042 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அந்நாடு முடக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில், தினக்கூலி தொழிலாளர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் உணவு பொருட்களை விநியோகம் செய்ய சிந்து மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அங்கு வசிக்கும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு உணவு மற்றும் அத்யாவசிய பொருட்கள் கிடைப்பது இல்லை என புகார் எழுந்துள்ளது. கராச்சியில் உள்ள லியாரி சச்சல் கோத் உள்ளிட்ட பகுதிகளிலும், சிந்து மாகாணத்தில் வசிப்பவர்கள், தங்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைப்பது இல்லை எனவும், இதற்கு இந்துக்கள் என அதிகாரிகள் காரணம் கூறுவதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ஊரடங்கு நேரத்தில் அதிகாரிகள் எங்களுக்கு உதவி செய்ய மறுக்கின்றனர். நாங்கள் சிறுபான்மையினத்தவர் எனக்கூறி ரேஷன் பொருட்களை தர மறுக்கின்றனர் எனக்கூறினார்.

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதவர்கள், கராச்சி நகரில், ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்ட கடைகள் முன் காத்திருக்கின்றனர். ஆனால், இருக்கும் உணவு பொருட்கள் முஸ்லீம்களுக்கு மட்டும் தான் எனக்கூறி, இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்களை அங்கிருந்து கிளம்பி செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.


latest tamil news



இது குறித்து கராச்சியில் வசிக்கும் இந்து அமைப்பை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில், எங்களது அண்டை வீட்டினருக்கு உணவு பொருட்கள் கிடைப்பதாக தகவல் கிடைத்தது. எனது மகன் ரிக்ஷா ஓட்டுகிறார். ஊரடங்கு காரணமாக,அனைத்து சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் வீட்டில் தனியாக அமர்ந்துள்ளார். சாப்பிடுவதற்கு எதுவும் இல்லை. பணமும் இல்லை.
ரேஷன் கடைகளுக்கு சென்றால், அத்யாவசிய பொருட்கள் டிரக்குகளில் வீடுகளுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், கிடைக்கவில்லை. எங்களுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு காட்டப்படுகிறது? அனைவரையும் தான் இந்த வைரஸ் பாதிக்கிறது. ஆனால் யாரும், எங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை. ஒரு வாரமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்தால்,போலீசார் அடித்து விரட்டுகின்றனர். என தெரிவித்தார்.

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிறது. எங்களது வீடுகளில் உணவு இல்லை. எங்களிடம் ஓட்டு கேட்க மட்டுமே வருகின்றனர். உணவு வாங்க எங்களிடம் பணம் இல்லை. ஊரடங்கால், எங்களது தினசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேட்க யாரும் இல்லை என்றார்.

அம்ஜத் அயூப் மிர்சா என்ற தன்னார்வலர் கூறுகையில், பாகிஸ்தானில் சிறுபான்மையினர் கடுமையான உணவு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். ராஜஸ்தானில் இருந்து சிந்து மாகாணத்திற்கு இந்திய அரசு உணவு பொருட்கள் அனுப்ப வேண்டும். இங்கு நிலவும் பிரச்னையை, இந்திய பிரதமர் மோடியும், ஐ.நா., சபையும் மனித நேயத்தோடு அணுக வேண்டும். சிந்து மாகாணத்தில் மட்டும் 5 லட்சம் இந்துக்கள் வசித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தான் மக்கள் தொகையில் இந்துக்கள் 4 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை கூட அந்நாட்டு அரசு மதித்தது இல்லை. இந்த பாகுபாடு, கொரோனா அச்சுறுத்தல் உள்ள போதும் தொடர்வது வருத்தமளிப்பதாக பல தன்னார்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
08-ஏப்-202017:03:10 IST Report Abuse
hasan வெறுப்பை விதைக்க வேண்டாம்
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
02-ஏப்-202018:12:10 IST Report Abuse
Jayvee அதே போல இந்தியாவிலும் செய்யவேண்டும்... செருப்பால் அடிக்கவேண்டும்
Rate this:
Cancel
சுந்தர் - Rajapalayam,இந்தியா
01-ஏப்-202023:16:53 IST Report Abuse
சுந்தர் மனிதாபிமானம் என்றால் என்ன அது எங்கே கெடைக்கும் என கேட்பவர்களிடம் அங்கே எதிர்பார்க்க முடியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X