பொது செய்தி

தமிழ்நாடு

மரணத்தை நேருக்கு நேர் சந்திக்காதீர்கள்: ஏ.பி.சாஹி

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
கொரோனா, உயர்நீதிமன்ற நீதிபதி, அறிவுறுத்தல், புத்தகம்

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி மரணத்தை நேருக்கு நேர் சந்திக்காதீர்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி எச்சரித்துள்ளார்.

'பயணம் தொடங்கியது' என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு நீதிபதி ஏ.பி.சாஹி கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'கொரோனா வைரஸை குறைத்து மதி்ப்பிட்டதால் வளர்ந்த நாடுகள் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் நெருக்கமான நடமாட்டமும், தொடர்பும் தான் இத்தகைய நிலைக்கு காரணம். கண்ணுக்கு தெரியாத எதிரியாக கொரோனா இருப்பதால் நாம் மறைவாக இருப்பது தான் விவேகமானது. இது தான் சாணக்கியரின் கூற்று. லட்சுமண ரேகையை நாமே வரைந்து அதற்குள் அடைபட்டு கிடப்பதே அறிவுடைய செயல். தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம்' இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சாஹி அறிவுறுத்தி உள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஏப்-202000:28:31 IST Report Abuse
Tamilan தமிழ்நாட்டில் வேலையில் உள்ள ஒருவர் தமிழ் தமிழர் நாமம் ஓதாமல் அல்லது தமிழர்களுக்கு பயப்படாமல், எடுபிடியாக இல்லாமல் , தன்னிச்சையாக ஒரு கருத்தை அதுவும் பெரிய மனிதர் போல் கருத்தை கூறியிருக்கிறார் . அதுவும் தமிழர்களை மிரட்டுவது போலும் கூறியிருக்கிறார் . எல்லாம் மோடி கொடுக்கும் ஊக்கம் . இவருடைய வேலைக்கு சீக்கிரம் வேட்டு வைக்காமல் விட்டு விடுவார்களா தன்மான தமிழர்கள் ?.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
01-ஏப்-202021:09:19 IST Report Abuse
s t rajan நம் நாட்டுக்கு ஜன நாயகம் ஒத்துவராது. துபாய், சைனா, மாதிரி எவன் ரோடுல அநாவசியமா போனாலும் அபராதம் வசூலிங்க, கொடுக்கவில்லை என்றால் முட்டிக்கு அடித்து உள்ள தள்ளூங்க, ஊரைக் கூட்டச் சொல்லி டீவியில் போடுங்கள். அளவுக்கு மிஞ்சிய சுதந்திரம் நஞ்சாய் மக்களுக்கு நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கிறது.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
01-ஏப்-202020:57:57 IST Report Abuse
அசோக்ராஜ் மரணத்தை எண்ணிக் கலங்கிடும் சாஹீ மரணத்தின் தன்மை சொல்வேன் மானிடர் ஆன்மா மரணம் எய்தாது. மறுபடிப் பிறந்திருக்கும் மேனியைக் கொல்லும். மேனியைக் கொல்லும்... கொரோனாவில் அதுவும் ஒன்று. கொரோனா விட்டு விட்டாலும் உங்களின் மேனி வெந்து தான் தீரும். ஓர் நாள் .... ஆ...ஆ...அ...அ... அவனை அறிவாய் எல்லா உயிரும் அவனென்றே அறிந்து கொள்வாய் கண்ணன் மனது கொரோனா மனதென்றோ சட்டத்தை நழுவ விட்டாய் ஜட்ஜும் அவனே வக்கீலும் அவனே நீதியும் நெறியும் தீர்ப்பும் அவனே சட்டம் எழுக நின் நீதித்துவம் எழுக கொரோனா ஒழிக்க வாழ்க .... ஆ....ஆ...அ...அ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X