அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.1000 வழங்க, வீட்டுக்கே வரும் டோக்கன்: அமைச்சர் அறிவிப்பு

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

சென்னை: ரூ.1,000 உதவித்தொகைக்கான, டோக்கன் அனைவரின் வீடுகளுக்கும் வந்து தரப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.



latest tamil news



கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

நாளை(ஏப்.2) முதல் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் ஆரம்பிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே நிவாரணத் தொகையை வாங்குவதற்கும், ரேஷன் பொருட்களை வாங்குவதற்கும் ரேஷன் கடைகளில் கூட்டம் அலை மோதும் வாய்ப்பு உருவாகிவிடும்.


latest tamil news



இந்நிலையில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியதாவது, 'ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு ரேஷன் கார்டுதாரர்கள் எப்போது வரவேண்டும் என தெரிவிக்கப்படும். அதன்படி,ஒரு ரேஷன் கடையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 100 பேருக்கு இவ்வாறு வினியோகம் செய்யப்படும். அவரவருக்கு உரிய காலம் எது என்பது பற்றி எழுதப்பட்ட டோக்கன் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்' என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
02-ஏப்-202007:01:55 IST Report Abuse
a natanasabapathy சரியான திட்டமிடல் அரசிடம் இல்லை பாண்டி அரசு உதவி தொகையை வங்கி கணக்கில்செலுத்தி விட்டது வங்கிகணக்கு இல்லாத மக்களே இல்லை தமிழகத்திலும் வங்கிகணக்கில் செலுத்தி இருக்கலாம் ஆனால் கொள்ளை அடிப்பதற்காகவே நேரில் வரவேண்டும் என்கின்றனர் 50சதவிகித டோக்கீன்கள் கடைகள்மூலம் வழங்கப்பட்டு விட்டன இப்போது அமைச்சர் வீட்டுக்கு வந்து வழங்கப்படும் என்கிறார்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
02-ஏப்-202006:43:53 IST Report Abuse
Natarajan Ramanathan போக்குவரத்து பிரச்சினையால் வேறு இடங்களில் மாட்டிக் கொண்டவர்களுக்கு எப்படி வழங்குவார்கள்?
Rate this:
Cancel
pandiyan - kumbakonam,இந்தியா
02-ஏப்-202005:05:42 IST Report Abuse
pandiyan வீடுகளுக்கு சென்று டோக்கன் கொடுப்பதற்கு பதில் நேரடியாக பணத்தையே கொடுத்து விடலாமே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X