பொது செய்தி

தமிழ்நாடு

ஈஷாவில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை; ஈஷா மையம் விளக்கம்

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
Isha,IshaYogaCentre,coronavirus,covid19,ஈஷா,கொரோனா

கோவை: ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை எனவும், வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஈஷா மையம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இல்லை. எனவே, இதுதொடர்பாக ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

உலக சுகாதார நிறுவனம் 'கோவிட் - 19' வைரஸை ஒரு நோய் தொற்று என அறிவிப்பதற்கு முன்பாகவும், மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு மற்றும் பயண தடைகளை விதிப்பதற்கு பல நாட்கள் முன்பாகவே ஈஷாவுக்கு வந்த வெளிநாட்டினருக்கு சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து அதை தீவிரமாக செயல்படுத்தினோம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட கோவிட் -19 வைரஸ் தாக்கிய நாடுகளை சேர்ந்தோர் ஈஷா யோகா மையத்துக்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தோம். மேலும், கோவிட் - 19 வைரஸ் தாக்கிய நாடுகளுக்கு சென்றவர்கள், அந்த நாடுகளின் விமானநிலையங்கள் வழியாக வந்தவர்களும் ஈஷாவுக்கு வர வேண்டாம் என்று தெரிவித்து இருந்தோம்.


latest tamil newsஈஷாவுக்கு வந்த மற்ற வெளிநாட்டினர்கள் கட்டாயம் 28 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கட்டாய மருத்துவ பரிசோதனை மற்றும் உடல்ரீதியான இடைவெளி நெறிமுறைகளை (Protocols) தற்போது வரை ஈஷா பின்பற்றி வருகிறது.

ஈஷா யோகா மையத்தில் தங்கி இருப்பவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு சாதாரண நாட்களில் கூட கடுமையான மருத்துவ மற்றும் சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்போது அவர்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாக்கி உள்ளோம். ஈஷா மையத்தில் தங்கி பாதுகாப்பு பணி, தூய்மை பணி மற்றும் பிற களப் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த நெறிமுறை பொருந்தும். மேலும், ஈஷா வளாகத்தின் பல இடங்களில் கையை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் கிருமிநாசினிகளும் வைக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி மாதத்தில் இருந்தே மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா யோகா மையத்துக்கு தொடர்ந்து வருகை தந்து மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு வருகின்றனர். இதுவரை இங்கு தங்கியுள்ள ஒருவருக்கு கூட கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக, ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஈஷா யோகா மையம் அனைத்து விதமான மருத்துவ நெறிமுறைகளை அமல்படுத்தும் திறனுடன் இருப்பது மட்டுமின்றி, தனிமைப்படுத்துதல் மற்றும் உடல்ரீதியான இடைவெளியை ஆரம்பத்திலேயே அமல்படுத்திவிட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதுக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஈஷா வளாகத்தை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என ஈஷா சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
02-ஏப்-202018:11:20 IST Report Abuse
Jayvee பியூஸ் மனுஷ் டானியல் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் வேலைதான் இந்த அவதூறு மற்றும் குழப்பம்.. எடப்பாடி அரசே .. ... நேரம் வந்துவிட்டது.. வோட்டு அரசியலுக்காக குனிந்து போனது போதும்
Rate this:
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
02-ஏப்-202007:17:09 IST Report Abuse
Pandiyan கொரோன வைரஸ் பரவல் சம்மந்தமாக எந்தவொரு மதத்தையும் முன்வைத்து வதந்திகள் பரப்புவது நம் நாட்டிற்கு ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல ..
Rate this:
Cancel
Mani -  ( Posted via: Dinamalar Android App )
02-ஏப்-202006:29:19 IST Report Abuse
Mani aadu vetti kootam edhavadhu kidaikumaanu paakudhu... avanga thappikka
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X