மத்திய அரசின் நிதியை வழங்குங்கள் ; மோடிக்கு மம்தா கடிதம்

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

கோல்கட்டா : மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு வர வேண்டிய நிதியை உடனே வழங்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



latest tamil news



கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோவை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதற்கு மக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதி தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் மம்தா கடிதம் இன்று (ஏப்.,1) எழுதியுள்ளார்.


latest tamil news



அந்த கடிதத்தில் மம்தா கூறியதாவது : கொரோனா தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசின் உதவி மாநிலங்களுக்கு மிகவும் முக்கியம். மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதற்கும், மற்ற பிற நலத்திட்டங்களை செயல்படுத்தவும், மாநில அரசின் கடமைகளை நிறைவேற்றவும் ரூ. 25000 கோடி நிதி தேவைப்படுகிறது. ஊரடங்கு உத்தவால் மாநிலத்தில் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாநிலத்தின் பொருளாதார நிலை மற்றும் சூழல் சற்று மோசமாக உள்ளது.

மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியின் அளவு குறைந்துள்ளது. மத்திய அரசிடமிருந்து மாநலத்திற்கான நிதியும் காலதாமதமாகிறது. இது தொடர்பாக ஏற்கனவே பிப்., மாதத்தில் தங்களுக்கு கடிதம் எழுதினேன். எனவே மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை விரைவாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
03-ஏப்-202009:17:09 IST Report Abuse
hasan மாநில சுயாட்சி என்பது இல்லாவிட்டால் இப்படித்தான் மத்திய அரசிடம் எல்லாவற்றிற்கும் பிச்சைக்காரன் போல் கையேந்திக்கொண்டிருக்க வேண்டும் , மத்திய அரசு எல்லா நிதியாதாரத்தையும் தான் அள்ளிக்கொண்டு போய்விட்டு மாநிலங்களுக்கு கிள்ளி கொடுக்க கூட மனம் இல்லாமல் இருக்கிறது , நமது நாட்டிற்கு தேவை , மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி . பாதுகாப்பு வெளியுறவுத்துறை போன்ற சில துறைகளில் மட்டும் மத்திய அரசு முழு அதிகாரம் செலுத்த வேண்டும்
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
02-ஏப்-202006:31:46 IST Report Abuse
Raja மம்தா பேகம் வந்தேறிகளுக்குதான் முன்னுரிமை கொடுத்து பயன்படுத்துவாங்க. அவங்களுக்காக மத்திய அரசை எதிர்த்து போராடுறாங்க. பணம் தேவைன்னதும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்றாங்க. இவங்களுக்கு கொடுக்கறது வேஸ்ட். வாங்கிட்டு மத்திய அரசை குறைசொல்வாங்க.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
02-ஏப்-202003:58:57 IST Report Abuse
வெகுளி மத்திய அரசு வழங்கும் நிதியை இந்தியர்களுக்கு மட்டுமே பயன்படுத்துவேன் என்று கடிதத்தில் தீதீ உறுதிமொழி அளித்துள்ளாரா?.... கள்ள குடியேறிகளை கணக்கெடுத்து நாடு கடத்த தேச பற்றுடன் ஒத்துழைப்பாரா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X