ரஷிய அதிபர் புடினுக்கு கொரோனா பாதிப்பா?

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கொரோன பாதிப்பு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு மருத்துவ சோதனைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் 24 ஆம் தேதி மாஸ்கோவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை பார்வையிட சென்றபோது, அங்குள்ள டாக்டர் டெனிஸ் புரோட்சென்கோவிடம் பேசினார். அப்போது புடின் அவருடன் கைகுலுக்கினார்.



latest tamil news




இதனை தொடர்ந்து, புடின் சந்தித்த டாக்டர் புரோட்சென்கோவுக்கு நேற்று கொரோனோ வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். அவரது உடல் சீராக உள்ளது.

இந்நிலையில் புடினுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும். அவரது பணிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக செய்துவருவதாகவும் கிரெம்ளின் மாளிகை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
01-ஏப்-202023:15:13 IST Report Abuse
raghavan கைகுலுக்கல் இல்லை தும்ம கூட வேண்டாம். பேசும்போதே ஒருவரால் வைரஸை பரப்ப முடியும் என்று ஜப்பானிய விஞ்ஞானிகள் லேசர் தொழில்நுட்பத்தை வைத்து கண்டுபிடித்துவிட்டார்கள். வீடியோவும் வெளியாகி உள்ளது. அப்படி பார்த்தால் எல்லோரும் முக கவசம் அணிவதே நல்லது என்று தெரிகிறது..
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
01-ஏப்-202022:30:58 IST Report Abuse
வெகுளி கை கூப்பி வணக்கம் சொல்லி பழகுங்கப்பா.... இப்பல்லாம் தேவையில்லாமல் நம்ம ஊர்ல கூட கட்டிபுடிக்கிற கெட்ட பழக்கம் சிலரால் புகுத்தபடுகிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X