பொது செய்தி

இந்தியா

8ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்': சிபிஎஸ்இ அறிவிப்பு

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020
Share
Advertisement
CBSE,allpass,HRDMinistry,covid19,coronavirus,ஆல்பாஸ்,சிபிஎஸ்இ

புதுடில்லி : சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

உயிர்கொல்லி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நாடு முமுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


latest tamil news



இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள். 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X