அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நீட்டிப்பை மத்திய அரசு முடிவு செய்யும் ; இ.பி.எஸ்.,

Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
 ஊரடங்கு நீட்டிப்பை மத்திய அரசு முடிவு செய்யும் ; இ.பி.எஸ்.,

சென்னை : ''ஊரடங்கை நீட்டிப்பு செய்வது குறித்து, மத்திய அரசு தான் முடிவு செய்யும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.

சென்னை, சாந்தோம், கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள, 'அம்மா' உணவகங்களில், நேற்று காலை, முதல்வர், இ.பி.எஸ்., ஆய்வு மேற்கொண்டார். அவருடன், அமைச்சர் ஜெயகுமார், மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.சாந்தோம் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்பட்ட இட்லியை, முதல்வர் சாப்பிட்டார். உணவு தரமாக, ருசியாக இருப்பதாக, ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.1 ரூபாய்க்கு இட்லி'இதே தரத்தில், தினமும் மக்களுக்கு, உணவு சமைத்து வழங்க வேண்டும்' என, அறிவுரை கூறினார்.

அதன்பின், நிருபர்களிடம், முதல்வர் கூறியதாவது:தமிழகத்தில், 124 பேர், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கு உள்ளதால், ஏழை மக்கள் அனைவருக்கும், அம்மா உணவகத்தில், 1 ரூபாய்க்கு இட்லி வழங்கப்படுகிறது.தினமும், 4.50 லட்சம் பேர் சாப்பிடுகின்றனர். எவ்வளவு பேருக்கு வேண்டுமானாலும் தயாரிக்க, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வங்கிக் கடனுக்கு, மாத தவணை வசூலிக்க வேண்டாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. தவணை பிடித்தம் தொடர்பாக, எஸ்.எம்.எஸ்., தகவல் வந்துள்ளதை, மத்திய நிதி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.கட்டுப்பாடு விதிப்புடில்லியில் நடந்த கருத்தரங்கில், தமிழகத்தில் இருந்து, 1,131 பேர் பங்கேற்றுள்ளனர்;

அவர்களில், 515 பேரை கண்டறிந்துள்ளோம். சோதனை நடத்தியதில், 45 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.எனவே, மற்றவர்கள் தாமாக முன்வந்து, அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவரால், அவர் குடும்பம் மட்டுமின்றி, மற்றவர்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.எனவே, தாமாக முன்வந்தால், உரிய சிகிச்சை அளிக்கப்படும். ஆரம்ப நிலையிலே சிகிச்சை அளித்தால், குணமடைய வாய்ப்புள்ளது.

அவர்களின் முகவரி கிடைக்காததால், சுகாதாரத் துறை செயலர், வேண்டு கோள் விடுத்துள்ளார். கோவை, ஈஷா மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, நோய் அறிகுறி இருந்தால், சோதனை நடத்தப்படும். நோய் தொற்று இருந்தால், மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்து வருகிறோம்.கோவில், தேவாலயம், மசூதி அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை, துரிதமாக எடுக்கப்படுகிறது.வரும், 14க்கு பின், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, மத்திய அரசு தான் முடிவு செய்யும்.

பொது மக்கள் நலன் கருதி, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம்.அனுமதி ஒட்டு மொத்த மக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே, கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியும். நோய் பரவாமலிருக்கவே, சட்டம் போடப்படுகிறது; அதை மதித்து நடக்க வேண்டும். நோய் தாக்கம் தெரியாமல், பரவலாக வெளியில் செல்கின்றனர்.ஒவ்வொரு உயிரும், அரசுக்கு முக்கியம். எனவே தான், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு எவ்வித தடையும் இல்லை. வேளாண் பணிகளை மேற்கொள்ளவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-ஏப்-202018:36:55 IST Report Abuse
Lion Drsekar நீட்டிக்கப்படும் என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறார்., வந்தே மாதரம்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
03-ஏப்-202005:18:40 IST Report Abuse
 Muruga Velஎதுக்கெடுத்தாலும் வந்தே மாதரம் சொல்றீங்களே ..இல்லத்தரசி கோவிச்சுக்கிறதில்லயா .....
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
02-ஏப்-202017:07:55 IST Report Abuse
Loganathan Kuttuva கொரானா பாதிப்பு குறைவான மாநிலங்களில் ஊரண்டங்கு உத்தரவை ரத்து செய்து பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் சற்று நீட்டிக்கலாம்.
Rate this:
Cancel
Sakthivel - COIMBATORE,இந்தியா
02-ஏப்-202009:56:23 IST Report Abuse
Sakthivel மாநிலத்தின் நன்மையை கருத்தில் கொண்டு முதல்வரே எந்த ஒரு முடிவையும் மேற்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X