பொது செய்தி

இந்தியா

இருமல், தும்மலில் 8 மீட்டர் வரை பயணிக்கும் கொரோனா வைரஸ்

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
இருமல், தும்மல், 8 மீட்டர்,  பயணிக்கும் ,கொரோனா வைரஸ்

புதுடில்லி: 'கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, ஒருவருக்கு ஒருவர், 1 மீட்டர் இடைவெளி அவசியம்' என, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதை, உலக நாடுகள் பின்பற்றும் நிலையில், இருமல் மற்றும் தும்மலின் போது, கொரோனா வைரஸ், 8 மீட்டர் துாரம் வரை பயணிக்கும் என, தற்போது தெரியவந்துள்ளது.

உலக நாடுகளை, பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள, கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள, மனிதர்களிடையே, 1 மீட்டர் இடைவெளி தேவை என, உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இது, 1930ல், இருமல், தும்மலின் போது, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும், கிருமிகள் தொடர்பான ஆய்வை அடிப்படையாக கொண்டது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்த இடைவெளி போதுமானதல்ல என, தற்போது தெரியவந்துள்ளது. இதன்படி, இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் போது, கொரோனா வைரஸ் துகள்கள், காற்றின் வேகத்திற்கேற்ப, 8 மீட்டர் வரை பயணிக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, அமெரிக்காவிலிருக்கும், எம்.ஐ.டி., எனப்படும் மாசாசூட்ஸ் தொழில்நுட்ப மையத்தின் இணை பேராசிரியர், லிடியா பொரூய்பா கூறியதாவது: சாதாரணமாக, நீர்த்துளிகள் நோய்க்கிருமிகளை சுமந்துகொண்டு, 23 முதல், 27 அடி அல்லது, -8 மீட்டர் துாரம் வரை பயணிக்க முடியும். சமீபத்திய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், தும்மல் மற்றும் இருமல், சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் மூலம் கிருமிகளை கொண்டு செல்கிறது.

இதன்படி, இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் போது, கொரோனா வைரஸ் துகள்கள், காற்றின் வேகத்திற்கேற்ப, 8 மீட்டர் வரை பயணிக்கும்.சுற்றுப்புறத்தின் ஈரப்பதம் காரணமாக, வெளியே வந்த ஈரம் செறிந்த துகள்கள், ஆவியாகாமல் இருக்கும். இதன் காரணமாக, வெளியாகும் கிருமிகளின் ஆயுள் காலமும், பலமடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-ஏப்-202018:58:05 IST Report Abuse
Lion Drsekar ஒவ்வொரு நாள் ஒவ்வொரு செய்தி?? ஒரு நிமிடத்தில் 10 முறை காரி காரி துப்பிக்கொண்டே இருப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும், தினமலரில் பல முறை நான் எழுதி வருகிறேன், இது வரை எந்த ஒரு பயனும் இல்லை, இவர்கள் துப்பும் எச்சில் காற்றில் தூசுகளை அனைவரையும் பாதிக்கிறது என்று கூறிக்கொனெட்டு வருகிறேன், ?? ஒரு நடிகை கூறினால் உடனடியாக மக்களிடம் போய் சேரும் , வந்தே மாதரம்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
02-ஏப்-202010:23:54 IST Report Abuse
RajanRajan ஓ இனி அம்புட்டுதேன். உள்ளூர் ...கள் இனி தும்மியே அத்தனை பேருமே காலி பண்ணிடுவாங்க போல தெரியுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X