உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்: ஐ.நா., எச்சரிக்கை

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 01, 2020
Share
Advertisement
 உணவு பொருட்களுக்கு, தட்டுப்பாடு, ஏற்படும்,  ஐ.நா., எச்சரிக்கை

பாரிஸ்: 'தற்போதுள்ள சூழ்நிலையை உலக நாடுகள் சரியாக கையாளாவிட்டால், உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது' என, ஐ.நா., அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

உலகெங்கும், எட்டு லட்சத்து, 76 ஆயிரத்து, 766 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுவரை, ஒரு லட்சத்து, 84 ஆயிரத்து, 965 பேர் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், 43 ஆயிரத்து, 533 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் பலவும், முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து முடங்கி யுள்ளது. இதனால், ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தப்பட்டு, வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐ.நா., உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தலைவர், கியூ டோங்கியா; உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல், டெஸ்ரோஸ் கெப்ரியாசிஸ்; உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர், ராபர்டோ அஸிவேடோ ஆகியோர் இணைந்து, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பால், உலக நாடுகள் முடங்கியுள்ளன. இதனால், சர்வதேச அளவில் வர்த்தகம் மற்றும் உணவுப் பொருட்கள் பகிர்ந்து கொள்வது பாதிக்கப்பட்டுள்ளது.தற்போதே பல நாடுகளில், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் மக்கள் முண்டியடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு பொருட்கள் கிடைப்பது தொடர்பாக நிலையற்ற தன்மை நீடித்தால், உலக நாடுகளுக்கான ஏற்றுமதி நிறுத்தப்பட்டு, சர்வதேச சந்தையில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

தற்போதுள்ள நிலையில், சர்வதேச வர்த்தகம் நடப்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.வீடுகளிலேயே முடங்கி கிடப்பது மற்றும் பயணத்துக்கான தடையால், வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும், பொருட்கள் சந்தைக்கு செல்வதும் தடைபடுகிறது. இவற்றால், உணவு பொருட்கள் வீணாகின்றன. மேலும், உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்படும்.

உணவு பொருட்கள் உற்பத்தி, விநியோகம், பதப்படுத்துதல் ஆகியவை தடையில்லாமல் நடக்க வேண்டும். மேலும், நாடுகளுக்கு இடையே உணவுப் பொருட்களை பகிர்ந்து கொள்ள, நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு தேவை. தற்போதுள்ள நிலையை, உலக நாடுகள் சரியாக கையாளாவிட்டால், உலகம் முழுதும், உணவு பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


பலி உயர்வு:

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பலி எண்ணிக்கை, 43 ஆயிரத்து, 533 ஆக உயர்ந்துள்ளது. கடந்த, பிப்., இறுதியில் முதல் தொற்று தென்பட்ட, ஐரோப்பிய நாடான இத்தாலியில், மிக அதிகபட்சமாக, 12 ஆயிரத்து, 428 பேர் உயிரிழந்து உள்ளனர். அங்கு, ஒரு லட்சத்து, ஆறாயிரத்து, 792 பேருக்கு தொற்று உள்ளது.

மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், 9,053 பேர் உயிரிழந்துள்ளனர்; ஒரு லட்சத்து, 2136 பேருக்கு தொற்று உள்ளது. அதிக தொற்று உள்ளோர் பட்டியலில், ஒரு லட்சத்து, 88 ஆயிரத்து, 647 பேருடன், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மேற்காசிய நாடான ஈரானில், பலி எண்ணிக்கை, மூவாயிரத்தை தாண்டியது. அங்கு, 3,036 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம், 47 ஆயிரத்து, 593 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கும், சிறந்த வாய்ப்பை அமெரிக்கா தவறவிட்டுள்ளது' என, ஈரான் அதிபர், ஹசன் ருஹானி குற்றஞ்சாட்டியுள்ளார். ஈரானுடனான, அணு ஒப்பந்தத்தில் இருந்து, 2018ல், அமெரிக்கா விலகியது. பொருளாதார தடையும் விதித்தது. அதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது குறிப்பிடதக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X