சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
TamilNadu,Corona,Covid19,CoronaVirus,தமிழகம்,கொரோனா

சென்னை : தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, 16 மாவட்டங்கள், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை, 124 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் நடந்த மத ரீதியான மாநாட்டிற்கு, தாய்லாந்து நாட்டினருடன் சென்ற, 1,000க்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதில், 515 பேர் மட்டுமே, சுகாதாரத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை, 67 பேருக்கு பாதிப்பு இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பலருக்கு அறிகுறி இருப்பதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, மாநாட்டில் பங்கேற்ற, 500க்கும் மேற்பட்டோரை அடையாளம் காண்பதில், சுகாதாரத் துறைக்கு சிக்கலாக உள்ளது. அவர்களை, போலீசார் மற்றும் ரயில்வே துறை உதவியுடன் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அவர்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கலால், கொரோனா வைரஸ், தமிழகத்தில் சமுதாய தொற்றாக பரவ வாய்ப்புள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார், தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட, 16 மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில், தடுப்பு பணிகளில், 3,698 கள பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை, 1.83 லட்சம் வீடுகளில், 6.88 லட்சம் பேருக்கு, கொரோனா இருக்கிறதா என, ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ், சமூக தொற்றாக பரவாமல் இருக்க, பல்வேறு கட்ட நடவடிக்கைளை எடுத்து வருகிறோம்.தற்போது, டில்லி மாநாட்டில் பங்கேற்ற குழுவில் சென்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்த குழுவில் சென்றவர்கள், தானாகவே அரசு மருத்துவமனைகளுக்கு, சிகிச்சை பெற வர வேண்டும். அப்போது தான், தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
02-ஏப்-202010:27:51 IST Report Abuse
RajanRajan கொரானவை கட்டுபடுத்த போலீஸ் மட்டும் போதாது அந்த ஜுட்ஜ் சாமிகளும் களப்பணிக்கு இறங்கியாக வேண்டி வரும். வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X