பொது செய்தி

இந்தியா

தப்லிக் - இ - ஜமாத் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (54)
Share
Advertisement
தப்லிக் - இ - ஜமாத் , மாநில அரசு , மத்திய உள்துறை அமைச்சகம், எச்சரிக்கை

புதுடில்லி : டில்லியில் மத பிரசங்க கூட்டத்தில் பங்கேற்ற, தப்லிக் - இ - ஜமாத் உறுப்பினர்களால், 'கொரோனா' வேகமாக பரவும் ஆபத்து உள்ளதால், அவர்களை கண்டுபிடித்து, நோய் அறிகுறி இருந்தால், தனிமையில் வைக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த மார்ச், 8 -- -10ம் தேதிகளில், டில்லியில், நிஜாமுதீன் பகுதியில், தப்லிக் - இ - ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மத பிரசங்க கூட்டம் நடைபெற்றது.இதில், உள்நாட்டில் இருந்தும், மலேஷியா, இந்தோனேஷியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


கண்காணிப்பு


கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 'ஓரிடத்தில் அதிகமானோர் கூடக் கூடாது' என, டில்லி போலீசார் விதித்த தடையை மீறி கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்று, தமிழ கம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு திரும்பிய பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களில், ஏழு பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்ததாக, டில்லி நிஜாமுதீன் பகுதி ஜமாத் நிர்வாகம் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

அதன் விபரம்: மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு மசூதியில், பிப்., 27 - மார்ச் 1 வரை, தப்லிக் - இ - ஜமாத் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பங்கேற்ற பலர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலர், அடுத்து, டில்லியில் நடைபெற்ற தப்லிக் - இ - ஜமாத் கூட்டத்திலும் பங்கேற்று உள்ளனர். அதனால், மலேஷியாவில் இருந்து வந்தோரை, உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.

அது மட்டுமின்றி, சுற்றுலா விசாவில் வந்த வெளிநாட்டினர் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால், அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அறிகுறி இல்லாதவர்களை, உடனடியாக சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும். அதுவரை, அவர்களை, தப்லிக் - இ - ஜமாத் தனிமையில் வைத்து பராமரிக்க வேண்டும். அதை, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.

தப்லிக் - இ - ஜமாத்தின் பணிகளுக்காக, வங்கதேசம், இந்தோனேஷியா, மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட, 70 நாடுகளைச் சேர்ந்த, 2,000த்திற்கும் அதிகமானோர், சுற்றுலா விசாவில் இந்தியா வந்து, பல மாநிலங்களில் தங்கி உள்ளனர்.


பரிசோதனை


அவர்கள், இங்கு ஆறு மாதங்கள் வரை தான் தங்கியிருக்க முடியும். அவர்களை, தப்லிக் - இ - ஜமாத் தலைமையகம் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. சுற்றுலா விசாவில் வந்து, மத பிரசங்க நடவடிக்கையில் ஈடுபடுவது விசா விதிமீறலாகும். அவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தாண்டு ஜனவரி, 1 முதல், 2,000 வெளிநாட்டினர், இந்தியா வந்து, தப்லிக் - இ - ஜமாத் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் சிலர் சுற்றுப் பயணம் செய்துஉள்ளனர். இந்தோனேஷியாவைச் சேர்ந்த, எட்டு பேருக்கு, ஐதராபாதில் மேற்கொண்ட சோதனையில், கொரோனா பாதிப்பு உள்ளது தெரிய வந்துஉள்ளது.

டில்லியில், தப்லிக் - இ - ஜமாத் தலைமையகத்தில் உள்ளோருக்கும் வைரஸ் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, மாநில அரசுகள், விரைவாக செயல்பட்டு, தப்லிக் - இ - ஜமாத் உறுப்பினர்களை கண்டறிந்து, பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


பிரதமர் அலுவலகம் உத்தரவு


சுற்றுலா விசா வழங்குவதற்கு முன், விண்ணப்பிக்கும் நபர், இந்தியாவில் எங்கு தங்க உள்ளார் என்பதையும், தாயகம் திரும்புவதற்கான விமான டிக்கெட் வைத்துள்ளாரா, போதுமான நிதி உள்ளதா என்ற விபரங்களை அறிய வேண்டும் எனவும், வெளியுறவு அமைச்சகத்திற்கு, பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.


10 முக்கிய இடங்கள்


மத்திய அரசு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் தீவிரமாக பரவ வாய்ப்புள்ள, 10 முக்கிய இடங்களை, உன்னிப்பாக கண்காணித்து, பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டில்லியில், மேற்கு நிஜாமுதீன், வடகிழக்கு பகுதி, ராஜஸ்தானில், பில்வாரா, மேற்கு உத்தர பிரதேசத்தில், கவுதம் புத்தா நகர், மீரட் ஆகியவை, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மஹாராஷ்டிராவில், மும்பை, புனே; குஜராத்தில், ஆமதாபாத்; கேரளாவில், காசர்கோடு, பத்தனம் திட்டா ஆகிய பகுதிகளிலும், வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


2,361 பேர் வெளியேற்றம்


டில்லியில் தப்லிக் - இ - ஜமாத் தலைமையகத்தில் தங்கியிருந்த, 2,361 பேரை, 36 மணி நேரத்தில் அகற்றி யுள்ளதாக, டில்லி துணை முதல்வர், மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். தப்லிக் - இ - ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, 107 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல, ஐதராபாதைச் சேர்ந்த, ஒன்பது பேர், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர், பரிசோதனைக்கு பின் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தடை உத்தரவு காலத்தில் கூட்டம் நடத்த அனுமதித்த, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், கவ்ரங் காந்த் என்ற வழக்கறிஞர், மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-ஏப்-202018:42:30 IST Report Abuse
Natarajan Ramanathan ......பல்லிவாசலில் தலையணை இருக்காது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-ஏப்-202014:36:44 IST Report Abuse
Natarajan Ramanathan ...இசுலாமியன் தங்களது நாட்டில் இனப்பெருக்கம் செய்யமாட்டான். இந்தியா போன்ற வேற்று மத நாட்டில் மட்டுமே....தெரியாதா?
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
03-ஏப்-202019:38:30 IST Report Abuse
Malick Raja வாசகர்களில் கருத்துக்கள் யாராலும் ஒரு பொருட்டாக பார்க்கப்படாது .. கிடைக்கும் கூலிக்கு ஏற்ப கூவுவது தங்களின் தொழில் தர்மம் என்றும் சொல்வார்கள் .. எப்படியோ அமரர் நிலைக்கு முன்பு எவ்வளவு சொல்லவேண்டுமோ அத்தனையும் கூற கால நேரம் இல்லாததால் கூடியவரை கூவுகிறார்கள் .. இந்தியர்கள் 99.99% அறிவுடைமை கொண்டவர்கள் என்பது விளங்க வாய்ப்பில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X