சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'இப்போ மட்டும் வைரஸ் பரவாதா?'

Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'இப்போ மட்டும் வைரஸ் பரவாதா?'

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, 'கொரோனா' வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர், மகேஸ்வரி, அமைச்சர்கள், பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும், 'வைரஸ் பரவுவதை தடுக்க, அதிக கூட்டம் வேண்டாம்' எனக் கூறி, இரண்டு, கேமராமேன்களை மட்டும் சந்தித்து, அவர்கள் பேட்டி அளித்தனர்.பின், கலெக்டர் அலுவலகத்தில் தயாராக நின்ற, டேங்கர் லாரியில் இருந்து, குழாய் மூலம், கிருமி நாசினியை, அமைச்சர், பெஞ்சமின் தெளித்தார். அப்போது, 20க்கும் மேற்பட்ட, 'வீடியோ' மற்றும் புகைப்படக்காரர்கள், நெருக்கியடித்தபடி, அதை படம் பிடித்தனர். இதை கண்டதும், 'குஷி'யான அமைச்சர், 'போஸ்' கொடுத்தபடி, கலெக்டர் அலுவலகம் முழுவதும், கிருமி நாசினியை தெளித்தார்.இதை பார்த்த, மூத்த செய்தியாளர் ஒருவர், 'இப்போது மட்டும், வைரஸ் பரவாதா...' எனக் கேட்க, அருகில் இருந்த அதிகாரிகள், நமட்டுச் சிரிப்புடன், நகர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-ஏப்-202006:16:15 IST Report Abuse
D.Ambujavalli உமியைக்கூடத் தன வீட்டில் இருந்து கொண்டு வராது தொண்டர்களின் அவலை தானம் செய்து விளம்பரம் செய்யும் பலே கில்லாடி இந்த அம்மா எலெக்ஷன் சமயத்தில் மட்டும் ஒட்ட வேண்டிய இடத்தில் ஒட்டி, பெட்டியைக் கவனமாக வாங்கிவிட்டார் ஒரு சீட் கூட வெல்லாத நிலையில் பெட்டியை நன்றாக பூட்டி அமுக்கி விட்டார்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-ஏப்-202005:56:02 IST Report Abuse
D.Ambujavalli வைரஸ் பரவினால் என்ன, மற்றவர் உயிரே போனால் என்ன, எனக்கு விளம்பரம் தான் முக்கியம் எனக்கே அந்தத் தொற்று வந்தாலும் போஸ் கொடுத்து, நூறு நிருபர்களை வரவழைத்து மீடியா விளம்பரத்துடன் தான் ‘இழுத்துப் ‘ போகச் சொல்வேன் ரொம்ப... ரொம்ப நல்ல பாலிசி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X